திருச்சி மாவட்டம் துறையூர் டி.முருங்கப்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை நடைபெற உள்ளதால் கொப்பம்பட்டி. டி.ரெங்கநாதபுரம், டி.முருங்கப்பட்டி துணை மின் நிலையங்களிலிருந்து மின்சாரம் பெறும் கெப்பம்பட்டி. உப்பிலியபுரம், வைரிசெட்டி பாளையம், பி.மேட்டூர், காஞ்சேரிமலை புதூர், சோபனபுரம், டி.ரெங்க நாதபுரம், பச்சைமலை, கிருஷ்ணாபுரம், நரசிங்கபுரம், கோவிந்தபுரம், மருவத்தூர், செல்லபாளையம், செங்காட்டுப்பட்டி. வேங்கடத் தானூர், பெருமாள்பாளையம், டி.முருங்கப்பட்டி, டி.மங்கப்பட்டி மற்றும்
ப.பாதர்பேட்டை ஆகிய பகுதிகளில் நாளை 06.06.2023 காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது என துறையூர் கோட்ட செயற்பொறியாளர் ஆனந்தகுமார் தெரிவித்துள்ளார்.
இதே போல் புத்தாநத்தம் துணை மின்நிலையத்தில் நாளை (06.06.2023) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் புத்தாநத்தம், இடையபட்டி, காவல்காரன்பட்டி, புங்குருனிபட்டி, கணவாய்பட்டி, கழனிவாசல்பட்டி,
பிள்ளையார் கோவில்பட்டி, கள்ளக்காம்பட்டி டி.புதுப்பட்டி, எண்டபுலி, மாங்கானப்பட்டி ஆகிய பகு திகளில் நாளை (6ம் தேதி) காலை 9:45 முதல் மாலை 4:00 மணி வரை மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய மணப்பாறை கோட்ட செயற்பொறியாளர் அன்புசெல்வன் தெரிவித்துள்ளார்.