திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 ஒன்றியங்களில் காலியாக உள்ள 75 க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக உதவியாளர் என்படும் தலையாரி பணியிடங்கள் கடந்த மாதம் நிரப்பப்பட்டன. இந்த பணியிடங்கள் பெரும்பாலும் தகுதியான நபர்களுக்கு வழங்கப்பட்டிருந்தாலும் சில பணியிடங்கள் சிபாரிசுகளின் அடிப்படையில் நிரப்பப்பட்டதாக கூறப்படுகிறது. அந்த வகையில் ஸ்ரீரங்கம் தாலுக்காவில் மட்டும் 9 பேருக்கு தலையாரி பணியிடம் வழங்கப்பட்டது. அதில் தேமுதிகவைச் சேர்ந்த மணிகண்டம் ஒன்றிய துணைச் செயலாளர் ராமச்சந்திரன் என்பவருக்கு தலையாரி பணியிடம் வழங்கப்பட்டுள்ளதாக பெரும் சர்ச்சையை எழுந்துள்ளது. அந்த வகையில் தேமுதிக நிர்வாகிக்கு சிபாரிசு செய்தது யார்? என்பது குறித்து பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது..