Skip to content
Home » திருச்சி அருகே ஒருவர் உயிரிழப்பு…2வருடங்களுக்குப் பிற கு பிரேத பரிசோதனை…

திருச்சி அருகே ஒருவர் உயிரிழப்பு…2வருடங்களுக்குப் பிற கு பிரேத பரிசோதனை…

  • by Authour

திருச்சி மாவட்டம் சமயபுரம் அடுத்து இருங்களூர் ஊராட்சிக்குட்பட்ட புறத்தாக்குடி பகுதியில் வசித்தவர், பாஸ்கர் வயது 37, துணி தைக்கும் டெய்லர் வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளன.

இந்நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 16ஆம் தேதி நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. உடனே உறவினர்கள் இவரை மீட்டு சமயபுரம் அருகே உள்ள தனியார் (SRM) மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது வழியிலையே உயிரிழந்து விடுகிறார்.
உடனே இவரது உறவினர்கள் அனைவரும் இவர் இயற்கை மரணத்தைத் தான் இறந்தார் என பிரேத பரிசோதனை செய்ய வேண்டாம் என உறவினர்கள், ஊர் மக்கள் அனைவரும் தனியார் மருத்துவமனை மருத்துவர்களிடம் கேட்டுக் கொண்டதின் பேரில் இறந்த பாஸ்கரின் உடலை உறவினர்களும் ஒப்படைத்துள்ளனர்.

பின்னர் அண்ணாநகர் அருகே உள்ள கல்லறைப் பகுதியில் பாஸ்கர் உடலை புதைத்துள்ளனர்.

இந்நிலையில் பாஸ்கரின் உறவினர்கள் இடையே கருத்து வேறுபாடு காரணமாக இரண்டாக பிரிந்துள்ளனர். இதில் பாஸ்கரனின் பெரியப்பா மகன் செந்தில் மற்றும் அவரது உறவினர்கள் வேல்முருகன், ஆசைத்தம்பி, சின்னச்சாமி, சுரேஷ் ஆகியோர் கடந்த 25 நாட்களுக்கு முன்பு தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் பாஸ்கர் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் தாழ்த்தப்பட்டோர் ஆணையம் இறந்த பாஸ்கரின் உடலை எடுத்து பிரேத பரிசோதனை செய்யும்படி உத்தரவிடுகிறார்.

இந்த உத்தரவின் படி மண்ணச்சநல்லூர் வட்டாட்சியர் சக்திவேல் முருகன், லால்குடி சராக காவல்துறை துணை கண்காணிப்பாளர் அஜய் தங்கம் தலைமையில் 20க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புடன் புரத்தாக்குடி அண்ணாநகர் பகுதியில்

புதைக்கப்பட்ட பாஸ்கரின் உடலை பிரேத பரிசோதனைக்காக தோண்டி எடுத்தனர்.

இரண்டு வருடத்திற்குப் பின்பு சந்தேகம் மரணம் எனக் கூறி உடலை எடுக்கப்பட்ட இச்சம்பவத்தால் புறத்தாக்குடி அண்ணாநகர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சந்தேக மரணம் என புகார் அளித்த பாஸ்கரின் பெரியப்பா மகன் செந்தில் இறந்த பாஸ்கர் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது இந்த வழக்கு சமயபுரம் காவல் நிலையத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *