திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே சுங்கச்சாவடி பகுதியில் அமைந்துள்ள தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தில் தழிழர்களின் பாரம்பரிய பொங்கல் திருவிழா சிறப்பாக நடைபெற்றது. இந்த பொங்கல் விழாவானது தமிழர்களின் பாரம்பரிய முறைப்படி கரகாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம், நாதஸ்வரம், மேள தாளங்கள் முழங்க சிறப்பாக நடைபெற்றது. யானை, குதிரை ,காளை மாடுகள், பசுமாடு உள்ளிட்டவைகளை காட்சிக்காக வைக்கப்பட்டிருந்தது மிகவும் பாரம்பரிய முறையில் அமைந்திருந்தது. மாணவர்களுக்கு என தனித்துவமாக பல்வேறு தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகளான பல்லாங்குழி, வழுக்கு மரம், உரியடி, தாயம், கயிறு இழுத்தல் மற்றும் பல்வேறு போட்டிகள் இடம் பெற்றிருந்தது, பார்வையாளர்களையும் மாணவர்களையும் ஈர்க்கும் விதமாக அமைந்திருந்தது.
பல்கலைக்கழக இணை வேந்தர் அனந்தலட்சுமி கதிரவன் , சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு பொங்கல் வாழ்த்துகளையும், பொங்கல் பண்டிகையை பாதுகாப்பாக
கொண்டாடுமாறு வலியுறுத்தினார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு இணைவேந்தர் அனந்தலட்சுமி கதிரவன் பரிசுகளை வழங்கி பாராட்டினார். இவ்விழாவினை முன்னிட்டு பல்கலைக்கழக மாணவ மாணவிகள் பங்கேற்ற சிறப்பு கலை நிகழ்ச்சியும் இடம் பெற்றது. முன்னதாக பல்கலைக்கழக பதிவாளர் டாக்டர் M.ரவிச்சந்திரன் அவர்கள் வரவேற்புரை வழங்கினார். விழாவில் தனலட்சுமி சீனிவாசன் கல்வி குழுமத்தின் நிர்வாக இயக்குனர் நீவாணி கதிரவன், பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் சி கே ரஞ்சன், பல்வேறு கல்லூரிகளின் புல முதல்வர்கள், துணை புல முதல்வர்கள், பேராசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இறுதியாக மாணவர்கள் நல பிரிவின் துணை புல முதல்வர் டாக்டர் ரவிச்சந்திரன் நன்றி உரையாற்றினார்.