நாகை மாவட்டம் நாகூரில் இன்று நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர், திருச்சி சிவா, தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.அப்போது திமுக கூட்டணி கட்சி சார்பில் கதிர் அரிவாள் சின்னத்தில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் வை.செல்வராஜ் வாக்குகள் கேட்டு வாக்காளர்கள் மத்தியில் பேசிய திருச்சி சிவா,
2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் குடியுரிமை சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டப்போது அதில் இந்துக்கள், கிறிஸ்தவர்கள் என ஆறு மதங்களைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என தெரிவித்தனர். ஆனால் அதில் முஸ்லிம்களை விட்டுவிட்டார்கள் என குற்றம் சாட்டிய திருச்சி சிவா, இந்த பாரபட்சம் கூடாது என திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள்
நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பியும் அது நீர்த்துப் போனதற்கு காரணம் அதிமுக தான் என்றும் , அதிமுக எம்பிக்கள் அந்த மசோதாவிற்கு வாக்களித்தது தான் என்றார்.
இஸ்லாமியர்களை புறக்கணிக்க கூடாது என்றும் அவர்களையும் குடியுரிமைச் சட்டத்தில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தியும் அது பயனற்று போனது என தெரிவித்த திருச்சி சிவா, மசோதா தோற்க முயற்சி எடுத்தால் குடியுரிமை கிடைக்க கூடிய மற்ற மத மக்களின் கோபத்துக்கு ஆளாக நேரிடும் என்பதால் மின்னணு வாக்குப்பதிவு மூலம் திருத்தத்திற்கு அனுமதி வழங்க வேண்டும் என கேட்டு அதில் 99 வாக்குகள் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பெற்றன. ஆனாலும் குடியுரிமை சட்ட மசோதா திருத்தம் தோற்றுப் போக காரணம், அதிமுக மத்திய அரசுக்கு ஆதரவாக அளித்த அந்த 13 ஓட்டுகள் தான் என்றும் அதிமுகவின் சதியால் முஸ்லிம்களுக்கு கிடைக்க இருந்த நன்மைகள் பயனற்று போனதாக எம்,பி திருச்சி சிவா குற்றம் சாட்டினார்.