டூவீலரை திருடி சென்ற மர்ம ஆசாமி கைது..
திருச்சி உறையூர் பாளையம் பஜார் பகுதி சேர்ந்தவர் இளம் தமிழன் (51 ). இவர் அறிமுகம் இல்லாத ஒரு நபருடன் சேர்ந்து குடித்துவிட்டு தனது டூவீலரில் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது இளம் தமிழனை திருச்சி சென்னை பைபாஸ் பாலத்தின் சர்வீஸ் ரோடு பகுதியில் இறக்கிவிட்டு அங்கிருந்து அந்த மர்ம ஆசாமி டூவீலரை திருடி கொண்டு சென்று விட்டார். பிறகு இது குறித்து இளந்தமிழன் பொன்மலை போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பகுதியில் வாகன சோதனை செய்தபோது ஒரு மர்ம ஆ சாமி சிக்கிக் கொண்டார். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்திய போது உறையூர் பாளையம் பஜாரை சேர்ந்த முகமது ஷரீப் (வயது 22) என்பது ம இவர் தான் இளந்தமிழன் மோட்டார் சைக்கிளை திருடி சென்றார் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் மகம்மது ஷரீபை கைது செய்து சிறையில் அடைத்தனர். முகமது ஷெரீப் ரவுடி பட்டியலில் உள்ளார்.
ஆட்டோ டிரைவர் மயங்கி விழுந்து பலி…
ஸ்ரீரங்கம், மேல அடைய வாளஞ்சான் தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து (48). ஆட்டோ டிரைவரான இவருக்கு நெஞ்சுவலி இருந்து வந்தது. இதனால் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். சம்பவத்தன்று வீட்டில் இருந்து ஆட்டோவை எடுத்துக்கொண்டு வெளியே சென்றவர் ஸ்ரீரங்கம் பத்திரப்பதிவு அலுவலகம் அருகில் திடீரென்று ஆட்டோவில் மயங்கி விழுந்தார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மாரிமுத்துவை ஸ்ரீரங்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் ஏற்கனவே மாரிமுத்து இறந்து விட்டதாக தெரிவித்தார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த ஸ்ரீரங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி…
திருச்சி தென்னூர் இதயாத் நகரை சேர்ந்தவர் இப்ராகிம்ஷா (24)கூலித் தொழிலாளி. இந்நிலையில் நேற்று சின்னசாமி நகர் பகுதியில் ஒரு வீட்டில் ஷெட் வேலை செய்து கொண்டிருந்தார். அப்பொழுது இப்ராகிம்ஷா இரும்பு குழாயை எடுத்து மின்வயரை தொட்டதில் அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் பக்கவாட்டு சுவரில்
இப்ராகிம்ஷா அடிபட்டு கீழே விழுந்து தலையில் பின் பக்கத்தில் காயம் அடைந்தார். இதனையடுத்து அவரை சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதனை செய்து இப்ராகிம்ஷா இறந்துவிட்டதாக கூறினார். இச்சம்பவம் குறித்து தில்லைநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
திருச்சி பிரபல நகை கடையில் 585 கிராம் நகையை திருடிய காசாளர் கைது…
திருச்சி சின்ன கடையில் வீதியில் பிரபல நகைக்கடை உள்ளது. இந்த நகை கடையில் மேலாளராக பணிபுரிந்து வருபவர் ரவிக்குமார். இவர் அப்பொழுது நகைக்கடையில் இருந்த 585 கிராம் தங்க நாணயங்களை காணவில்லை.
இதையடுத்து அவர் விசாரணை நடத்திய போது மேற்கண்ட தங்க நாணயத்தை அதே நகை கடையில் வேலை செய்யும் காசாளர் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த தனசேகரன் (வயது 32)என்பவர் திருடியது தெரியவந்தது.இவற்றின் மதிப்பு ரூபாய் பல லட்சம் ஆகும். இதையடுத்து ரவிக்குமார் கோட்டை குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தனசேகரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செல்போன் கடையின் பூட்டை உடைத்து பொருட்கள் திருட்டு…
திருச்சி மதுரை ரோட்டில் நத்தர்ஷா பள்ளிவாசல் பகுதியில் செல்போன் கடை வைத்து நடத்தி வருபவர் அபுதாகிர் (31). இவர் நேற்று முன்தினம் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார். மறுநாள் காலை செல்போன் கடைக்கு சென்று பார்த்த போது கடையில் பூட்டு உடைக்கப்பட்டு பொருட்கள் திருட்டு போய் இருப்பது கண்டு அதிர்ச்சிடைந்தார். இந்த திருட்டு குறித்து கோட்டை போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து செல்போன், பொருட்களை திருடி சென்ற நத்தர்ஷா பள்ளிவாசல் பகுதியை சேர்ந்த மற்றொரு அபுதாஹீர் (வயது 22 )என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.