டீ மாஸ்டரை தாக்கிய ரவுடி கைது…
திருச்சி காட்டூர், அம்மன் நகர் 8வது கிராஸை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (32), டீ மாஸ்டர் இவர் நேற்று அரியமங்கலம் எஸ்ஐடி அருகே சென்றுகொண்டிருந்தபோது அவ்வழியாக வந்த மர்ம நபர் இவரிடம் செல்போனை கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து அந்த மர்ம நபர் ராதாகிருஷ்ணனை கல்லால் தலையில் அடித்துவிட்டு தப்பி ஓடினார். இது குறித்து ராதாகிருஷ்ணன் அளித்த புகாரின் பேரில் அரியமங்கலம் போலீசார் வழக்கு பதிந்து காமராஜ நகர், அப்துல்லா தெருவைச் சேர்ந்த ராகவேந்திரன் (24) என்ற சரித்திர பதிவேடு ரவுடியை டீ மாஸ்டரை தாக் கியதாக கைது செய்தனர்.
3 டூவீலர்கள் திருட்டு ..
திருச்சி, அரியமங்கலம் காமராஜ் நகர், கலாம் ஆசாத் தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ் (40) இவர் டிச.31ந்தேதி தன் இருசக்கர வாகனத்தை அம்பிகாபுரம் மதுக்கடை அருகே நிறுத்திவிட்டு சென்றுள்ளார். பிறகு மீண்டும் திரும்பி வந்து பார்த்தபோது நிறுத்திய இடத்தில் இருந்து இரு சக்கர வாகனம் திருட்டுபோனது தெரியவந்தது இது குறித்து சுரேஷ் அளித்த புகாரின் பேரில் அரியமங்கலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர் இதேபோல் அம்பிகாபுரம், ரயில் நகரைச் சேர்ந்தவர் அறவாண் (41) இவர் கடந்த 28ந்தேதி தன் டூவீலரை அரியமங்கலம் ஸ்டாலின் நகர் டாஸ்மாக் அருகே நிறுத்திவிட்டு சென்றுள்ளார். மீண்டும் திரும்பிவந்து பார்த்தபோது இருசக்கர வாகனம் திருடுபோனது தெரியவந்தது. இது குறித்து அறவாண அளித்த புகாரின் பேரில் அரியமங்கலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர். திருச்சி மேலப்புதூர் ராவுத்தர் பேட்டையைச் சேர்ந்தவர் முகமது ரபீக் (52. ) இவர் ஜன 1ம் தேதி டூவீலரை தன் வீட்டின் முன் நிறுத்திவிட்டு சென்றுள்ளார். மீண்டும் திரும்பி வந்து பார்த்தபோது டூவீலர் திருட்டு போனது தெரியவந்தது. இது குறித்து ரபீக் அளித்த புகாரின் பேரில் பாலக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
மூதாட்டி மாயம்..
திருச்சி, மேல தேவதானத்தைச் சேர்ந்தவர் லோகநாதன் (58). இவரது தாயார் சுசீலா (வயது 81). இவர் சுற்று மனநலம் பாதிக்கப்பட்டவர். இந்நிலையில் கடந்த டிச.22ந்தேதி இவர் கழிப்பறை செல்வதாக லோகநாதனிடம் கூறிவிட்டு சென்றவர் மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை இது குறித்து லோகநாதன் அளித்த புகாரின் பேரில் கோட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.