ஆட்டோ மோதி மூதாட்டி பலி….
மேற்குவங்க மாநிலம், ஹரிச்சந்திரன் புரத்தைச் சேர்ந்தவர் கிலோத்தீன் மாலிக் (40). இவரது தாயார் சுகாய மாலிக் ( 65) . இவர் கடந்த டிசம்பர் 8ந் தேதி திருவரங்கம் அம்மா மண்டபம் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது எதிரே வந்த ஆட்டோ ஒன்று அவர் மீது மோதியது. இதில் கீழே விழுந்த சுகாயா மாலிக்கிற்கு இடுப்பு கை மற்றும் உடல் முழுக்க பலத்த காயங்கள் ஏற்பட்டது . இதையடுத்து அவரை உடனடியாக மீட்டுஸ்ரீரங்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் அவரை திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லும்படி பரிந்துரைத்தனர். இந்நிலையில் திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த
சுகாயாமாலிக் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.இது குறித்து புகாரின் பேரில் வடக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விபத்து ஏற்படுத்திய ஸ்ரீரங்கம் ஆர் எஸ் சாலையை சேர்ந்த தாமோதரன் என்பவரின் ஆட்டோவை பறிமுதல் செய்து அவரிடம் விசாரணை செய்து வருகின்றனர்.
கஞ்சா விற்ற 2 பேர் கைது…
திருச்சி, கன்டோன்மென்ட் , பாரதியார் சாலை அருகே கஞ்சா விற்பனை நடப்பதாக மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு கடந்த டிசம்பர் 15ந்தேதி தகவல் கிடைத்தது . அதன் அடிப்படையில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் உமா சங்கரி தலைமையிலான போலீசார் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி, உப்போடை தெருவை சேர்ந்த சிலம்பு ராஜா (35) என்பவரை கைது கைது செய்தனர். அதோடு அவரிடம் இருந்த சுமார் ரூ.86 ஆயிரம் மதிப்புள்ள 8.5 கிலோ கஞ்சாவை மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். இதேபோல்
திருச்சி அரியமங்கலம் மாரியம்மன் கோயில் காமராஜ் நகர் அருகே கஞ்சா விற்பனை நடப்பதாக அரியமங்கலம் போலீசாருக்கு டிசம்பர் 15 ந்தேதி தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீசார் அங்கு சோதனை மேற்கொண்டனர் அப்போது அங்கு கஞ்சா விற்பனியில் ஈடுபட்ட அரியமங்கலம் காமராஜரை சேர்ந்த கணேசன் (24) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
டாஸ்மார்க் டிரக் சேதம்… ரவுடி கைது…
திருச்சி கோட்டை கீழ தேவதானம் அருகே உள்ள டாஸ்மாக்கில் மேலாளராக பணியாற்றி வருகிறார் வீரமணி (வயது37).இவர் கடந்த 13 ந் தேதி டாஸ்மாக் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த மர்ம நபர் இவரிடம் மது குடிக்க பணம் கேட்டுள்ளார், வீரமணி தர மறுக்கவே அவர் அங்கு நின்று கொண்டிருந்த டாஸ்மார்க் லோடு ட்ரக்கின் முன்பக்க கண்ணாடியை உடைத்துள்ளார். இதுகுறித்து வீரமணி அளித்த புகாரின் பேரில் கோட்டை போலீசார் வழக்கு பதிந்து கீழ தேவதானம் பகுதியைச் சேர்ந்த அருண் பிரசாத் ( 36) என்பவரை டாஸ்மார்க் ட்ரக்கின் கண்ணாடியை உடைத்ததாக கைது செய்தனர். மேலும் கைது செய்யப்பட்ட அருண்பிரசாத் சரித்திர பதிவேடு ரவுடி என்பது குறிப்பிடத்தக்கது.
நாக்கைப் பிளந்து பச்சை குத்தும் வீடியோ… வாலிபர் கைது…
திருச்சி சிந்தாமணி வெனிஸ் தெருவை சேர்ந்தவர் ஹரிஹரன் ( 25). இவர் மேல சிந்தாமணி அருகே ஒரு பச்சை குத்தும் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த ஏழு மாதங்களுக்கு முன்பு ஹரிஹரன் மும்பை சென்று சுமார் ரூபாய் 2 லட்சம் செலவு செய்து தன் கண்களில் பச்சை குத்தி கொண்டுள்ளார், அதோடு தன் நாக்கையும் பிளந்து பச்சை குத்திக் கொண்டுள்ளார். இதைத்தொடர்ந்து ஹரிஹரன் தன் நண்பர் ஒருவருக்கும் கடந்த 9 ந் தேதி தன் பச்சை குத்தும் கடையில் வைத்து உரிய பயிற்சி மற்றும் அனுமதியின்றி நாக்கை பிளந்து பச்சை குத்தியுள்ளார். மேலும் அந்த நாக்கை பிளந்து பச்சை குத்தும் செயலை வீடியோ எடுத்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மருத்துவம் பயிலாமலே இது போன்ற செயல்களில் ஈடுபடுவது சட்டப்படி குற்றமாகும். இதைத்தொடர்ந்து இதுகுறித்து புகாரின் பேரில் கோட்டை போலீசார் வழக்குப்பதிந்து பச்சை குத்தும் கடை உரிமையாளர் ஹரிஹரனை கைது செய்தனர்.