கதிர் அடிக்கும் மிஷின் விற்பனை கடையில் பணம் கொள்ளை…
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அழகு நகரை சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் ரவிச்சந்திரன் (44 ).இவர் திருச்சி – சென்னை பைபாஸ் சாலையில் ஒரு தனியார் மருத்துவமனை அருகில் நெல் கதிர் அடிக்கும் எந்திரம் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார் . இந்த கடையை வழக்கம்போல் நேற்று முன்தினம் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். மறுநாள் காலை வழக்கம் போல் வந்து கடையை திறக்க வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதை கண்டு அதிர்ச்சியான அவர் உள்ளே சென்று பார்த்தபோது பணப்பெட்டியில் பணம் இல்லை. ரூ. 75 ஆயிரம் திருட்டு போனது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து ஸ்ரீரங்கம் போலீசில் புகார் அளித்தார்.இப்புகாரின் பேரில் ஸ்ரீரங்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுப்பன் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.
பியூட்டி பார்லர் உரிமையாளர் வீட்டில் திருட்டு…
திருச்சி புத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் பால்ராஜ். இவரது மகன் பிரபு ( 29). இவர் திருச்சி மலைக்கோட்டை பகுதியில் பியூட்டி பார்லர் நடத்தி வருகிறார். இவர் சம்பவத்தன்று வீட்டை பூட்டிவிட்டு கடைக்கு சென்று விட்டார் . பின்னர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் வைத்திருந்த கையில் அணியும் பிரேஸ்லெட் திருடு போயிருந்தது தெரிய வந்தது .இது குறித்து பிரபு திருச்சி அரசு மருத்துவமனை போலீசில் புகார் அளித்தார் .புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜகோபால் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை… பிரபல ரவுடி உள்பட 8 பேர் கைது..
திருச்சி மாநகரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா, பான்பராக் உள்ளிட்ட போதைப் பொருட்கள் மற்றும் வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை கொடி கட்டி பறக்கிறது. குறிப்பாக லாட்டரி சீட்டுகள் விற்பனை கண்டோன்மென்ட் காந்தி மார்க்கெட், உறையூர், கோட்டை பகுதிகளில் அதிக அளவு விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து திருச்சி மாநகரில் கண்டோன்மெண்ட், காந்தி மார்க்கெட், கோட்டை,உறையூர் ஆகிய பகுதிகளில் அந்தந்த சரக போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் போலீசார் அதிரடி வேட்டை நடத்தினர். இந்த அதிரடி வேட்டையில் பிரபல ரவுடி உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 7 செல்போன்கள் மற்றும் கட்டு. கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் லாட்டரி சீட்டுகள் விற்றதற்கான ஆவணங்களும் சிக்கியது. இந்த வழக்கு தொடர்பாக முக்கிய நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.