Skip to content

17 பவுன் நகைகளை ஏமாற்றி மோசடி செய்த பெண் கைது…. திருச்சி க்ரைம்..

17 பவுன் நகைகளை ஏமாற்றி மோசடி செய்த பெண் கைது.. 

திருச்சி பொன்மலைப்பட்டி பொன்னேரிபுரத்தைச் சேர்ந்தவர் ராபர்ட் சகாய தாஸ் (வயது 59).இவர் சம்பவத்தன்று மருத்துவமனைக்கு சென்றார்.அப்போது தனது நண்பர் பொன்னேரிபுரத்தைச் சேர்ந்த ஜெகதீசன் மனைவி மேரி என்பவரிடம் தங்க சங்கிலி, நெக்லஸ், தோடு, , மோதிரம் ,வளையல் உள்ளிட்ட 17 சவரன் தங்க நகைகளை கொடுத்துவிட்டு சென்றார்.பின்னர் அந்த நகைகளை மேரி திருப்பித் தரவில்லை.பலமுறை கேட்டும் திருப்பி தராமல் ஏமாற்றினார்.உடனே இதுகுறித்து ராபர்ட் சகாயராஜ் பொன்மலை குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார்.புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் பேபி உமா வழக்குப்பதிந்து மேரியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

போதை பொருட்கள் விற்ற 2 பேர் கைது… ஒருவர் தப்பி ஓட்டம்

ஸ்ரீரங்கம், திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி தோப்பு குடிநீர் தொட்டி பின்புறம் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்ககப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து திருவரங்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சட்டநாதன் தலைமையிலான போலீசார் ரோந்து சென்று தீவிரமாக கண்காணித்தனர். அப்போது அங்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கான்ஸ், விமல் உள்ளிட்ட போதைப் பொருட்கள் வைத்திருந்த திருவானைக்காவல் பகுதியைச் சேர்ந்த லோகநாதன் (வயது 46), குமார் என்பவர் மனைவி நிர்மலா (54) ஆகிய இருவரை கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய குமார் என்பவரை தேடி வருகின்றனர். இதே போல் திருச்சி செசன்ஸ் கோர்ட் போலீஸ் சரகம் கல்யாணசுந்தரம் நகர் பகுதியில் லாட்டரி சீட்டுகள் விற்றதாக பெலிக்ஸ், சுந்தர்ராஜ் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.

பி.எஸ்.என்.எல் ஊழியர் தூக்கிட்டு தற்கொலை… 

திருச்சி வடக்கு தாராநல்லூர் அம்மன் ஸ்டோர் பகுதியைச் சேர்ந்தவர் பட்டு முத்து. இவரது மகன் கனகராஜ் (வயது 27) பி.எஸ்.என்.எல். டவர் வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகி ஒன்பது மாதங்கள் ஆகிறது. இவரது மனைவி தனலட்சுமி (வயது 22). தனலட்சுமி பியூட்டி பார்லர் பணி செய்து வருகிறார். கனகராஜ் செல்போனில் ரம்மி விளையாடும் பழக்கத்தை கொண்டிருந்தார். இதில் அவருக்கு நஷ்டம் ஏற்பட்டதாக தெரிகிறது. இந்நிலையில் கணவன் – மனைவி இருவரும் வேலைக்கு சென்று விட்டனர். மனைவி வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்தார். வீட்டில் பார்த்தபோது கனகராஜ் வீட்டில் மின்விசிறியில் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கிடந்தது தெரியவந்தது. உடனே இதுகுறித்து தனலட்சுமி காந்தி மார்க்கெட் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸ் பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் வெங்கட்ராமன் வழக்கு பதிந்து, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காப்பர் வயர்கள் திருடிய சிறுவன் கைது… 

திருச்சி மேல சிந்தாமணி மாதுளம் கொள்ளை தெருவை சேர்ந்தவர் அம்ஜத் கான் (வயது 43).இவர் வீட்டில் கிடந்த காப்பர் வயர்களை மர்ம நபர் திருடி சென்று விட்டார் .இது குறித்து அம்ஜத் கான் கோட்டை போலீசில் புகார் அளித்தார்.புகாரியின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்தனர்.இன்னிலையில் காப்பர் வயர்களை திருடியதாக அப்பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர்.அவனிடமிருந்து காப்பர் வயர்களை பறிமுதல் செய்த போலீசார் சிறுவனை சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.

error: Content is protected !!