போலி பாஸ்போர்ட்…. ஒருவர் கைது…
திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் நேற்று சிங்கப்பூர் செல்ல இருந்த பயணிகளை இமிகிரேசன் அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்பொழுது புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள மணவாள கரை கிராமத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் (42) என்பவரின் பாஸ்போர்ட்டை வாங்கி அதிகாரி சோதனை செய்தார். அப்பொழுது அந்த பாஸ்போர்ட் வாங்கி பார்த்த போது அது போலி ஆவணங்கள் மூலம் தயாரித்து பெற்றது என தெரிய வந்தது இதையடுத்து இமிகிரேசன் அதிகாரி சுகிபன் ஏர்போர்ட் போலீசில் புகார் கொடுத்தார். இப்புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பாலசுப்பிரமணியத்தை கைது செய்தனர்.
செல்போன் திருட்டு…
திருச்சி பஞ்சபூர் கணபதி நகரை சேர்ந்தவர் சிட்டிபாபு. இவரது மனைவி முனி பிரியா (48). இவர் அந்தப் பகுதியில் போட்டோ கடை வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார். இந்த நிலையில் மர்ம ஆசாமிகள் சிலர் கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்று ஹார்ட் டிஸ்க், செல்போன் உள்ளிட்ட ரூபாய் 15 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை திருடிக் கொண்டு அங்கிருந்து ஓடி விட்டனர். இது தொடர்பாக முனி பிரியா செசன்ஸ் கோர்ட் போலீசில் புகார் கொடுத்தார். இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து போட்டோ கடையில் பொருட்களை திருடிய மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.
செல்போன் பறிப்பு….
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே உள்ள திருவிடைவாசல் பகுதியை சேர்ந்தவர்
நாகராஜன் இவரது மனைவி ஆனந்தி (35) நேற்று திருச்சிக்கு வந்த ஆனந்தி மத்திய பேருந்து நிலையப் பகுதியில் நின்று கொண்டு செல்போனில் பேசிக்கொண்டு இருந்தார். அப்பொழுது அந்த வழியாக திடீரென டூவீலரில் வந்த மர்ம ஆசாமி ஆனந்தி அருகில் வந்து அவரது செல்போனை பறித்துக் கொண்டு அங்கிருந்து ஓடி விட்டார். இந்த சம்பவம் தொடர்பாக ஆனந்தி கன்டோன்மென்ட் குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பகுதியில் சந்தேகத்திற்கு கிடமாக சுற்றித்திரிந்த வாலிபர் ஒருவரை பிடித்து விசாரணை செய்தபோது திருச்சி பாலக்கரை முதலியார் சத்திரம் பகுதி சேர்ந்தவர்நைனா முகமது வயது 24 என்பதும் இவர்தான் ஆனந்தியின் செல்போனை திருடி சென்றார் என தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் நைனா முகம்மது கைது செய்து அவரிடம் இருந்து செல்போன் மற்றும் டூவீலரை பறிமுதல் செய்தனர்.
பணம் -செல்போன் பறித்த 2 பேர் கைது…
திருச்சி வாசன் நகர் 12வது குறுக்கு சாலையை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி ( 50) இவர்வங்கியில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவர் நேற்று ஈவிஆர் ரோடு பகுதியில் தனது மகனை டியூசனில் கொண்டு விடுவதற்கு அழைத்துக் கொண்டு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்பொழுது அந்த வழியாக இரண்டு வாலிபர்கள் பாலசுப்பிரமணியத்தில் சட்டை பாக்கெட்டில் இருந்த ரூ.500 பணம் மற்றும் செல்போனை பறித்துக் கொண்டு அங்கிருந்து ஓடி விட்டனர். இது தொடர்பாக பாலசுப்பிரமணியன் அரசு மருத்துவமனை குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். இப்புகாரின் பேரில் போலீசார் விசாரணை செய்த போது திருச்சி மேல சிந்தாமணி பகுதியை சேர்ந்த ஜான் பாதுஷா (20)முகமது பாருக் ( 21)ஆகிய 2 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து செல்போன் பணத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.