கிராம துணை தலைவரை மிட்டிய வாலிபர்கள் 8 பேர் கைது…
திருச்சி, திருவானைக்கோயில், களஞ்சியம் கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன் (வயது59). இவர் களஞ்சியம் கிராம துணை தலைவர். இந்நிலையில் கடந்த ஜன.5 ந் தேதி அப்பகுதியில் உள்ள மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. இதற்காக கிராம துணைத்தலைவர் மற்றும் கோவில் நிர்வாகம் சார்பில் கிராமத்தில் உள்ள குடும்பத்திற்கு கோவில் வரி தலா ரூ.3 ஆயிரம் வசூல் செய்யப்பட்டது. கும்பாபிஷேக செலவுகள் அதிகரித்ததால் கூடுதலாக ரூ.1000 கிராம மக்களிடம் வசூலிக்க கோவில் நிர்வாகம் சார்பில் முடிவெடுக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி வாலிபர்கள் சிலர் பயங்கர ஆயுதங்களுடன் கண்ணன் வீட்டின் முன் திரண்டு அவரை பயங்கர ஆயுதங்களை காட்டி மிரட்டியுள்ளனர். இது குறித்து கண்ணன் அளித்த புகாரின் பேரில் ஸ்ரீரங்கம் போலீசார் வழக்கு பதிந்து திருவானைக்கோயில் களஞ்சியத்தைச் சேர்ந்த ஜெயகுமார் (வயது32), ஜெயபிரகாஷ் (வயது29), அரவனுார் மேல பாண்டமங்கலத்தைச் சேர்ந்த சிவா (வயது37), தீபக் (20), தினேஷ் (வயது21), சசிதரன் (வயது21), கிஷோர் (வயது20), நவீன் (வயது21) ஆகிய 8 பேரை களஞ்சியம் கிராமத்தின் துணை தலைவரை மிரட்டியதாக கைது செய்தனர். மேலும் இவர்ளிடமிருந்து 2 அரிவாள், 1 கத்தி, மற்றும் 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
பூட்டிய வீட்டில் கொள்ளை.
திருச்சி, கேகேநகர், ஒலையூர் சாலை, பிஜி நகரைச் சேர்ந்தவர் சாதனா (வயது38). இவர் கடந்த ஜன.21ந்தேதி தன் வீட்டை பூட்டிவிட்டு தன் மகனுடன் மருத்துவமனைக்கு சென்றார். பிறகு மருத்துவமனையில் இருந்து அதேநாளில் வீடு திரும்பியபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளிருந்த 26 பவுன் தங்க நகைகள், 1 கிலோ மதிப்புள்ள வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.36 ஆயிரம் பணம் ஆகியவை திருடுபோனது தெரியவந்தது. இது குறித்து சாதனா அளித்த புகாரின் பேரில் கேகேநகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருட்டுபோன மொத்த பொருட்களின் மதிப்பு ரூ.5 லட்சத்து 81 ஆயிரம்.
சிசிடிவி கேராவை உடைத்து மாடுகளை ஓட்டிச்சென்ற மர்ம நபர்…
திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் வார்டு குழு அலுவலகத்தில் உதவி ஆணையராக பணியாற்றி வருபவர் சீனு கிருஷ்ணன். இவர் கடந்த ஜன.6 ந்தேதி உறையூர் கோணக்கரை மயானம் அருகே சாலையில் சுற்றித்திரிந்த மாடுகளை பிடித்து கோணக்கரை கால்நடைகள் கூடாரத்தில் அடைத்துள்ளார். இந்நிலையில் அன்றே அந்த கூடாரத்தினுள் நுழைந்த மர்ம நபர் அங்கு பொருத்தப்பட்டிருக்கும் 10 சிசிடிவி கேமராக்கலை உடைத்துவிட்டு, அடைக்கப்பட்டிருந்து மாடுகளை ஒட்டி சென்றுள்ளார். இது குறித்து உதவி ஆணையர் சென்னு கிருஷ்ணன் ஜன.21ந்தேதி அளித்த புகாரின் பேரில் உறையூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
30 உயரத்தில் இருந்து விழுந்து எலக்ட்ரீஷியன் பரிதாப சாவு.
திருச்சி கேகேநகர், சுப்ரமணியபுரம், மணிமேகலை தெருவைச் சேர்ந்தவர் பிரவீன்குமார் (வயது31). இவர் சங்கிலியாண்டபுரத்தில் உள்ள நிறுவனத்தில் எலக்ட்ரீஷியனாக வேலை செய்து வந்தார். இந்நிலையில் ஜன.20ந்தேதி இவர் கோட்டை, தெப்பக்குளம் அருகே உள்ள தேவாலயத்தில் 30 அடி உயரத்தில் வேலை செய்துகொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக பிரவீன்குமார் 30 அடி உயரத்தில் இருந்து கிழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில் ஜன.21ந்தேதி பிரவீன்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அவரது உறவினர் உஷா தேவி அளித்த புகாரின் பேரில் கோட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது…
திருச்சி, குழுமிக்கரை பூங்கா அருகே கஞ்சா விற்பனை நடப்பதாக திருச்சி அரசு மருத்துவமனை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீசார் அங்கு சோதணை மேற்கொண்டனர். அப்போது அங்கு கஞ்சா விற்றவரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர் காந்தி மார்க்கெட், வடக்கு தாராநல்லுலூரைச் சேர்ந்த சபரி மணி (27) என்பது தெரியவந்தது. மேலும் அவரிடமிருந்து 4.700 கிலோகிராம் கஞ்சா மற்றும் 1 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல் எ.புதுார், காவேரி நகர் அருகே முற்புதரில் கஞ்சா விற்ற ஸ்ரீரங்கம், பட்டர்தோப்பு, கொள்ளிட சாலையைச் சேர்ந்த விக்னேஷ்வரன் (22) என்பவரை மது விலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் கைது.
போலி பாஸ்போர்ட் ஒருவர் கைது.
வேதாரண்யம், ஆயக்கராம்புலத்தைச் சேர்ந்தவர் வீரசேகரன் (43). இவர் ஜன.21ம் தேதி மலேசியாவில் இருந்து திருச்சி சர்வதேச விமான நிலையம் வந்தார். அங்கு இம்மிகிரேஷன் பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் வீரசேகரன் போலி ஆவணங்கள் சமர்பித்து தன் பெயரை மாற்றி கொடுத்து போலி பாஸ்போர்ட் பெற்றது தெரியவந்தது. இது குறித்து இம்மிகிரேஷன் பரிவு அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் ஏர்போர்ட் போலீசார் வீரசேகரனை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.