Skip to content

அம்மா மண்டபம் படித்துறை அருகே ஆண் சடலம் மீட்பு… திருச்சி க்ரைம்..

  • by Authour

.
வாலிபரின் காதை கடித்தவர் கைது

ஶ்ரீரங்கம், வீரேஸ்வரம், கல்மேட்டுத்தெருவைச் சேர்ந்தவர் ஆகாஷ் (வயது20). இவர் கடந்த 26ந் தேதி தன் நண்பர்களுடன் வீரேஸ்வரம் ஆஞ்நேயர் கோவில் அருகே நின்றுகொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம ஆசாமி இவர்களிடம் தகாராறில் ஈடுபட்டு, ஆகாஷின் காதை கடித்து, அவரை தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த ஆகாஷ் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். இது குறித்து ஆகாஷ் அளித்த புகாரின் பேரில் திருவரங்கம் போலீசார் வழக்குப்பதிந்து திருவரங்கம் வீரேஸ்வரத்தைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவரை, வாலிபரை தாக்கியதாக கைது செய்து சிறையில் அடைத்தனர். இதேபோல் செந்தில் குமாரின் மனைவியை தாக்கிய திருவரங்கம் வீரேஸ்வரத்தைச் சேர்ந்த கார்த்திக் (வயது21), தினகர் (வயது20), கார்த்திகேயன் (23) மற்றும் கிஷோர் (23) ஆகிய 4 வாலிபர்களை திருவரங்கம் போலீசார் கைது செய்தனர்.

அம்மா மண்டபம் படித்துறை அருகே ஆண் சடலம் மீட்பு.

திருச்சி, திருவானைக் காவல், திம்மராய சமுத்திரம் கிராம நிர்வாக அலுவலர் மணியரசன். இவர் கடந்த 24ம் தேதி வீரேஸ்வரம் பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டார், அப்போது அங்கு அம்மாமண்டபம் படித்துறை அருகே அடையாளம் தெரியாத சுமார் 60 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடந்தது தெரியவந்தது. இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் மணியரசன் அளித்த புகாரின் பேரில் ஸ்ரீரங்கம் போலீசார் அந்த உடலை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்தவர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் பலி…

திருச்சி, செந்தண்ணீர்புரம், முத்துமணி டவுனைச் சேர்ந்தவர் இறையனார் (வயது75), இவர் கடந்த 24ந் தேதி சைக்கிளில் விஸ்வாஸ் நகர் அருகே சென்றுகொண்டிருந்தார். அப்போது அதே வழியில் அதிவேகமாக வந்த அடையாளம் தெரியாத நான்கு சக்கர வாகனம் இவரது சைக்கில் மீது மோதியது. இதில் இறையனார் துாக்கிவீசப்பட்டார். அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு இறையனார் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து இறையனார் மனைவி முத்து பிரைமதி அளித்த புகாரின் பேரில் வடக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

கஞ்சா விற்ற வாலிபர் கைது.

திருச்சி, உறையூர் வாத்துக்கார தெரு ஜங்சன் அருகே கஞ்சா விற்பனை நடப்பதாக மது விலக்கு அமலாக்கப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீசார் அங்கு சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு கஞ்சா விற்ற திருச்சி, ராம்ஜிநகர், கல்லிக்குடியைச் சேர்ந்த சபரி (வயது33) என்பவரை மது விலக்கு அமலாக்கப்பரிவு போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 50 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.