Skip to content
Home » சிட்டி க்ரைம்.. திருச்சி ஏர்போர்ட்டில் போலி பாஸ்போட்டுடன் 2 பேர் கைது

சிட்டி க்ரைம்.. திருச்சி ஏர்போர்ட்டில் போலி பாஸ்போட்டுடன் 2 பேர் கைது

மீன் வியாபாரியிடம் பணம் பறித்தவர் கைது.

திருச்சி அரங்கனேரி சாந்தபுரத்தை சேர்ந்தவர் சாதிக் பாட்ஷா (38. ) இவர் நேற்று தென்னூர் ஆழ்வார் தோப்பு அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த மர்ம நபர் இவரிடம் கத்தியை காட்டி மிரட்டி அவரது பையில் இருந்த ஆயிரம் ரூபாய் பணத்தை பறித்து சென்றுள்ளார். இதுகுறித்து சாதிக் பாஷா தில்லைநகர் போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து தென்னூர், ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த மாலிக் பாட்ஷா (26) என்பவரை பணம் பறித்ததாக கைது செய்தனர்.

கஞ்சா விற்ற பெண் உள்பட இரண்டு பேர் கைது.

திருச்சி காந்தி மார்க்கெட் மகாலட்சுமி நகர் அருகே கஞ்சா விற்பனை நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது . இதன் பேரில் போலீசார் அங்கு சோதனை மேற்கொண்டனர், அந்த சோதனையில் வடக்கு தாராநல்லூரைச் சேர்ந்த ஆனந்த் (27)என்பவர் அங்கு கஞ்சாவில் விற்றது தெரியவந்தது. இதையடுத்து காந்தி மார்க்கெட் போலீசார் ஆனந்தை கைது செய்தனர். இதேபோல் ராம்ஜி நகர் மில் காலனி அருகே கஞ்சா விற்பனை நடப்பதாக போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது அதன் அடிப்படையில் போலீசார் அங்கு சோதனை மேற்கண்டனர் இதில் ராம்ஜி நகரை சேர்ந்த கேசவன் மனைவி முழுமதி (வயது 63) என்பவர் கஞ்சா விற்றது தெரிய வந்தது. அவரை போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.

போலி பாஸ்போர்ட்..  2 பயணிகள் கைது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியை சேர்ந்தவர் அமீர் ஹுசைன் ( 48. )இவர் நேற்று முன்தினம் அபுதாபி செல்வதற்காக திருச்சி சர்வதேச விமான நிலையம் வந்துள்ளார். அங்கு இம்மிகிரேஷன் பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் அமீர் ஹுசைன் போலி ஆவணங்கள் சமர்ப்பித்து தன் பெற்றோர் பெயர், பிறந்த ஊர் மற்றும் பிறப்பு தேதியை மாற்றி கொடுத்து போலி பாஸ்போர்ட் பெற்றது தெரியவந்தது. அவரை இமிகிரேசன் பிரிவு அதிகாரிகள் ஏர்போர்ட் போலீசில் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ஏர்போர்ட் போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் சிவகங்கை திருப்பத்தூரை சேர்ந்தவர் கதிரேசன் ( 47)இவர் நேற்று முன்தினம் மலேசியாவில் இருந்து திருச்சி சர்வதேச விமான நிலையம் வந்துள்ளார். இமிகிரேசன் அதிகாரிகள் கதிரேசன் ஆவணங்களை சோதனை மேற்கொண்டனர். இதில் அவர் போலி ஆவணங்கள் சமர்ப்பித்து பிறந்த தேதி மற்றும் பிறந்த ஊரை மாற்றி கொடுத்து போலி பாஸ்போர்ட் பெற்றது தெரியவந்தது. இதையடுத்து இமிகிரேசன் அதிகாரிகள் அவரை பிடித்து ஏர்போர்ட் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இது தொடர்பாக ஏர்போர்ட் போலீசார் வழக்குப் பதிவு செய்து கதிரேசனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!