திருச்சி , மண்ணச்சநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இந்தியன் ஓவர்சீஸ் வங்கி திருவெள்ளரையில் கோகிலா (38)கிளை மேலாளராக பணிபுரிந்து வருகிறார். அதே வங்கியில் இமானுவேல் லார்ட் ஜோசப் (41) என்பவர் நகை மதிப்பீட்டாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், மேற்படி இமானுவேல் லார்ட் ஜோசப் அடிக்கடி வங்கிக்கு காலதாமதமாக வந்ததால் ஜோசப் மீது வங்கி மேனேஜர் கோகிலா புகார் அளித்திருந்தார். இதனால் கோகிலா மீது ஜோசப்பிற்கு முன்விரோதம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து வங்கி மேனேஜர் கோகிலாவிற்கு குடிநீர் பாட்டிலில் தங்கம் தரம் பிரிக்க பயன்படுத்தப்படும் நைட்ரிக் ஆசிட் அமிலத்தை கலந்து கொலை முயற்சி செய்ததாக கோகிலா மண்ணச்சநல்லூர் போலீஸ் ஸ்டேனில் புகார் அளித்தார். இப்புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து திருச்சி முதன்மை குற்றவியல் கோர்ட்டில் விசாரணையில் இருந்து வந்த நிலையில் நேற்று இமானுவேல் லார்ட் ஜோசப் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டு, குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5ஆயிரம் அபராதமும் , அபராத தொகை கட்ட தவறும்பட்சத்தில் ஆறு மாத காலம் கூடுதல் சிறை தண்டனையும் விதித்து முதன்மை குற்றவியல் நீதிபதி உத்தரவிட்டார்.