திருச்சி-கரூர் நெடுஞ்சாலையில் அல்லூர் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் திருச்சி யிலிருந்து கரூர் நோக்கி சென்ற ஆம்புலன்ஸ் திருச்சி நோக்கி சென்ற டூவீலரை மோதி ரோட்டு ஓரத்தின் இருந்த மரத்தின் மீது மோதி நின்றது. இதில் டூவீலரில் வந்த பெட்டவாய்த்தலை அண்ணா நகரை சேர்ந்த ஜெகநாதன்(46)அவரது மனைவி பார்வதி (35)உறவினரின் மகன் முருகேசன்(12)ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். 3 பேரும் உடனடியாக மூவரும் மீட்கப்பட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து ஜீயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்..
திருச்சி மாவட்டம் ஜீயபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பேரூர் டாஸ்மாக் அருகே ஒருவர் பட்டாக்கத்தியுடன், நான் தான் இந்த ஏரியாவில் ரவுடி என்றும், ஆபாச வார்த்தைகளால் திட்டிக்கொண்டு, பொது மக்களை அச்சுறுத்தும் வகையில் சுற்றி திரிவதாக திருச்சி மாவட்ட எஸ்பியின் உதவி எண் (9487484651)மூலம்தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் திருச்சி எஸ்பி வருண்குமார் உத்தரவின் பேரில், ஜீயபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று குற்றவாளியான திருச்சி மாவட்டம்
கோப்பு பகுதி கீழத்தெருவை சேர்ந்த கண்ணன் மகன் பிரசாந்த்(20),என்பவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பிரசாந்த் சோமரசம்பேட்டை ரவுடி கோப்பு நாகராஜ் என்பவரது பெயரில் Facebook, Youtube, Instagram உள்ளிட்ட சமூக வளைதளங்களை வைத்துக்கொண்டு ரவுடி கோப்பு நாகராஜ் உடன் சேர்ந்து ஆயுதங்களுடன் இருப்பது போன்ற புகைப்படங்களையும், வீடியோக்களையும் பதிவிட்டு வந்ததாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது..