தென்னக ரயில்வே பாதுகாப்பு படையின் கோட்டங்களுக்கு இடையிலான மூன்றாவது ஆண்டு கிரிக்கெட் போட்டி திருச்சி கோட்டத்தால் கே.கே.நகர், ஓலையூர் அருகே உள்ள தனியார் மைதானத்தில் (மார்ச் 8,9,10) ஆகிய மூன்று நாட்கள் லீக் மற்றும் நாக் அவுட் முறையில் நடத்தப்பட்டது.
திருச்சி, மதுரை, சேலம், சென்னை, ஐ.சி.எப் சென்னை, பாலக்காடு, திருவனந்தபுரம் ஆகிய 7 கோட்டங்களிலிருந்து 7 அணிகள் பங்கேற்ற கிரிக்கெட் போட்டியின் இறுதி போட்டியில் முதலில் விளையாடிய திருச்சி
கோட்டம் 25 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்கள் எடுத்தது.
அடுத்து விளையாடிய சேலம் கோட்டம் 13.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 88 ரன்கள் எடுத்தது.
திருச்சி கோட்டம் 67 ரன்கள் வித்தியாத்தில் வெற்றி பெற்று தென்னக ரயில்வே பாதுகாப்பு படையின் கோட்டங்களுக்கு இடையிலான மூன்றாம் ஆண்டு கிரிக்கெட் போட்டியின் சாம்பியன் அணியாக திகழ்ந்தது.
பேட்டங்கில் திருச்சி கோட்டத்தை சேர்ந்த டி. ஜெகதீசன் 42 ரன்களும், சி. இளையராஜா அவுட்டாகமல் 35 ரன்களும் சேலம் கோட்டத்தை சேர்ந்த எஸ். முத்துசாமி 29 ரன்களும் எடுத்தனர்.
பந்து வீச்சில் திருச்சி கோட்டத்தை சேர்ந்த கே. உதயகுமார் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
திருச்சி கோட்டத்தை சேர்ந்த கே. உதயகுமார், இறுதி போட்டியின் நாயகனாகவும், டி. ஜெகதீசன் போட்டியின் நாயாகனாகவும் தேர்ந்தெடுத்து கௌரவிக்கப்பட்டனர்
பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவில் இந்திய சுங்கத்துறை ஆணையர் (தமிழ்நாடு தடுப்பு), திருச்சியை சேர்ந்த டி. அனில், ஐ.ஆர். எஸ். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முதல் இரண்டு இடங்களை பிடித்த அணிகளுக்கு கேடயம், சான்றிதழ் மற்றும் பதக்கங்கள சென்னை, தென்னக ரயில்வே பாதுகாப்பு படையை சேர்ந்த துணை தலைமை பாதுகாப்பு ஆணையர் பிரசாந் யாதவ், ஐ.ஆர்.பி.எப்.எஸ், திருச்சி கோட்டத்தை சேர்ந்த முத்த பிரிவு பாதுகாப்பு ஆணையர் எஸ். ராமகிருஷ்ணன், ஐ.ஆர்.பி.எப்.எஸ், திருச்சி உதவி பாதுகாப்பு ஆணையர் ஆர். சின்னதுரை ஆகியோர் முன்னிலையில் வழங்கினார்.