திருச்சி ஸ்ரீரங்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 2020 ஆம் ஆண்டு சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் 20 ஆண்டுகள் தண்டனை வழங்கி திருச்சி நீதிமன்ற தீர்ப்பு.
இன்று மாலை தண்டனை அறிவிக்கப்பட்ட நிலையில் பசுபதி வயது (27), திருப்பதி (29) இரண்டு குற்றவாளிகளும் திருச்சி நீதிமன்ற முதலாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சி செய்தனர்
உடனடியாக அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு இரண்டு குற்றவாளிகளையும் திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் கால்கள் முறிந்த நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில் இருவரும் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். திருச்சி அரசு மருத்துவமனையில் போலீசார் குவிப்பு. இந்த சம்பவம் காரணமாக திருச்சியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.