முன்னாள் முதல்வர் கருணாநிதி தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் பாடல் ஒன்றை பாடியதாக நாம் தமிழர் நிர்வாகி சாட்டை துரைமுருகன் மீது திமுக ஐடி விங் சார்பில் புகார் அளிக்கப்பட்டதது. இதன் அடிப்படையில் திருச்சி சைபர் கிரைம் போலீசார் 5 பிரிவுகளில் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த வழக்கின் அடிப்படையில் நேற்று தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் வைத்து தனிப்படை போலீசார் துரைமுருகனை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட சாட்டை துரைமுருகனிடம் 3 மணி நேரத்துக்கு மேல் விசாரணை நடத்திய போலீசார் நேற்று மாலை திருச்சி மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி சுவாமிநாதன் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, சாட்டை துரைமுருகனை கைது செய்ய எந்தவித முகாந்திரமும் இல்லை என்று தெரிவித்ததோடு, அவரை நீதிமன்றக் காவலில் வைக்க அவசியமில்லை என்று கூறி விடுவித்தார்