திருச்சி மாநகர் கண்டோன்மெண்ட் அனைத்து மகளிர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 01.10.2019-ந்தேதி ஒரு சிறுவனை கடத்தி சென்று வீட்டினுள் பூட்டி வைத்து ஒரு நபர் பாலியல் தாக்குதல் செய்ததாகவும், யாரிடமாவது சொன்னால் சிறுவனை ஜெயிலில் அடைத்து விடுவேன் என மிரட்டியதாக பெறப்பட்ட புகாரில், திருச்சி கொட்டபட்டுவை சேர்ந்த பிரதீபன் வயது 33, த.பெ.ரெத்தினாயகம் என்பவரின் மீது வழக்குப்பதிவு செய்து புலன்விசாரணை மேற்கொள்ளப்பட்டு, வழக்கில் பிரதீபனை கைது செய்து சிறையில் அடைத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வழக்கின் புலன் விசாரணை முடிக்கப்பட்டு, மேற்படி எதிரி பிரதீபன் மீது 30.11.2019-ந்தேதி குற்றப்பத்திரிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தும், மேற்படி வழக்கில் திருச்சி மகிளா நீதிமன்ற நீதிபதி ஸ்ரீவட்சன் முன்னிலையில் நீதிமன்ற விசாரணையை முடித்து, இன்று 21.08.2023-ம்தேதி, மேற்படி பிரதீபனுக்கு ச/பி 5(1),5(m) r/w 6(1) of POCSO Act 2012 -ன்படி 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், அபராதம் ரூ.5,000/-ம் அபராதம் கட்ட தவறினால் 6 மாதம் சிறை தண்டனையும், ச/பி 342 IPC -ன்படி ஒரு ஆண்டு கடுங்காவல் தண்டனையும், அபராதம் ரூ.500/-ம், அபராதம் கட்ட தவறினால் 3 மாதம் சிறை தண்டனையும், ச/பி 363 IPC -ன்படி ஐந்து ஆண்டு கடுங்காவல் தண்டனையும், அபராதம் ரூ.3,000/-ம், அபராதம் கட்ட தவறினால் 6 மாதம் சிறை தண்டனையும், ச/பி 506(i) IPC -ன்படி ஒரு ஆண்டு கடுங்காவல் தண்டனையும், அபராதம் ரூ.500/-ம், அபராதம் கட்ட தவறினால் 3 மாதம் சிறை தண்டனையும் விதித்து ஏககாலத்தில் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு ரூ.2,00,000/- இழப்பீடுத்தொகை வழங்கவேண்டும் என்று தீர்ப்பு வழங்கினார். இவ்வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞர்கள் அருள்செல்வி மற்றும் ஜாகீர் உசேன் ஆகியோர் ஆஜராகி அரசு சார்பாக வழக்கு நடத்தி வாதாடினார்கள்.