திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள பூலாங்குடி பழங்கனாங்குடி சாலை ஹேப்பி நகரை சேர்ந்தவர் ராஜேந்திர பிரசாத் (56)விவசாயி .இவரது மனைவி ஹேமா பிந்து (50), மகன்கள் குணசேகர் ( 20 ) குருசாமி (20)இவர்கள் இருவரும் இன்ஜினியரிங் கல்லூரியில்படித்து வருகின்றனர். மூத்த மகள் ஹர்சினி மருத்துவர். திருச்சி தில்லைநகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் மருத்துவராக வேலை பார்த்து வருகிறார். 2வது மகள் உமா சங்கரி மருத்துவ கல்லூரியில் படித்து வருகிறார்.
ராஜேந்திர பிரசாத் பூர்வீகம் ஆந்திர மாநிலம். அவரது தந்தை இங்குள்ள ஒரு மத்திய அரசு நிறுவனத்தில் வேலை கிடைத்து இங்கு வந்தார். பின்னர் இவர்கள்இங்கேயே தங்கி விட்டனர். ஹேமா பிந்து பக்தி மார்க்கத்தில் தீவிரமாக இருந்தார். அடிக்கடி பூஜை புனஷ்காரம் என இருந்தார். குழந்தைகளையும் பக்தி நெறியில் அதிகமாக ஈடுபடும்படி வற்புறுத்தினார். நள்ளிரவிலும் எழுந்து பாராயணம் செய்வாராம்.
மனைவியின் இந்த செயல்பாடு , கணவனுக்கு பிடிக்கவில்லை. இதனால் அவர்களிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. நேற்று இரவு 11 மணி அளவில் ஹேமா பிந்து சாமி கும்பிட்டுக் கொண்டு இருந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த ராஜேந்திர பிரசாத் வீட்டில் வாகனத்திற்காக வைத்திருந்த பெட்ரோலை எடுத்து மனைவி மீது விசீனார். அப்பொழுது சாமி அறையில்எரிந்து கொண்டிருந்த தீபத்தில் பெட்ரோல் பட்டு தீ பற்றியது.
இதில் ஹேமா பிந்துமீது தீ பிடித்துள்ளது. அவர் அலறினார். பெட்ரோலை ஊற்றிய ராஜேந்திர பிரசாத் மீதும் தீ பற்றிக்கொண்டது. அவர்களை காப்பாற்ற முயன்ற மகன்கள் குணசேகர், குருசாமி ஆகியோருக்கும் தீக்காயம் ஏற்பட்டது. பெட்ரோலை ஊற்றிய ராஜேந்திர பிரசாத்திற்கு பெரிய அளவில் தீக்காயமும் ஏற்பட்டுள்ளது.
தீக்காயம் அடைந்த நான்கு பேரையும் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில்சிகிச்சைக்காக சேர்த்தனர்
இதில் ஹேமா பிந்துவும் ராஜேந்திர பிரசாத்தும் ஆபத்தான நிலையில் உள்ளனர். அவர்கள் உடலில் 70% காயங்கள் ஏற்பட்டதால் உயிருக்கு போராடிக்கொண்டு இருக்கிறார்கள். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இச்சம்பவம் குறித்துநவல்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.இந்த சம்பவம் திருவெறும்பூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.