திருச்சி மாநகராட்சிகுட்பட்ட 19 மற்றும் 20 வது வார்டுகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக குடிநீருடன் கலங்களாக வருவதாக புகார் வந்தது. அதனை தொடர்ந்து மாநகராட்சி மேயர் மு. அன்பழகன் அந்த பகுதியில் ஆய்வு செய்து அதனை சரி செய்ய பொறியாளர்களுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து அப்பகுதியில் சுகாதாரமான குடிநீர் விநியோகம் செய்ய அனைத்து விதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டது..
இந்த நிலையில் அந்தப் பகுதிகளில் மீண்டும் மாநகராட்சி மேயர் இன்று ஆய்வு மேற்கொண்டார். வீடு வீடாக சென்று மக்களிடம் குடிநீர் குறித்து கேட்டறிந்த அவர் அவர்கள் வீட்டிலிருந்து குடிநீரை வாங்கி குடித்து பார்த்தார். மேயர் அன்பழகன் கூறியதாவது… திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் உள்ள 19 மற்றும்
20-வது வார்டுகளில் குடிநீரில் பிரச்சனை ஏற்பட்டது. அந்த பிரச்சனை தற்பொழுது முழுமையாக சரி செய்யப்பட்டு தற்பொழுது சுத்தமான குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. கடந்த 10 ஆண்டு காலமாக அதிமுக ஆட்சியில் குடிநீர் விநியோகத் திட்டமோ, பாதாள சாக்கடை திட்டமோ, செயல்படுத்தப்பட வில்லை. திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்பு தான் இந்த திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 800 கி.மீ தூரத்திற்கான திட்டங்கள் முடிவடைந்துள்ளது. இன்னும் 10 கிலோமீட்டர் அளவிற்கு தான் மீதம் உள்ளன. அந்த பணிகளும் விரைவில் முடிவடைய உள்ளது. அதிமுக 10 ஆண்டுகால ஆட்சியில் எதுவும் செய்யாமல் தற்பொழுது நாங்கள் செய்யும் பொழுது ஏற்படும் சிறு பிரச்சனைகளை வைத்துக்கொண்டு அவர்கள் ஆர்ப்பாட்டம் செய்து வருகிறார்கள் என தெரிவித்தார்.
அந்த ஆய்வின் போது மாநகராட்சி செயற்பொறியாளர்கள் கே.எஸ். பாலசுப்பிரமணியன், செல்வராஜ் உதவிய ஆணையர் சாலை தளவளவன் ,உதவி செய்யப் பொறியாளர்கள் . கிருஷ்ணமூர்த்தி, இப்ராஹிம்,மாமன்ற உறுப்பினர் எல் ஐ சி சங்கர் உடன் இருந்தனர்.