திருச்சி மாநகராட்சி பட்ஜெட்டை கண்டித்து மாநகராட்சி அதிமுக கவுன்சிலர்கள் கோ.கு.அம்பிகாபதி, சி.அரவிந்தன், அனுசியா ரவிசங்கர் ஆகியோர் வெளிநடப்பு செய்தனர்.பின்னர் அவர்கள் நிருபர்களிடம் கூறியதாவது:-
அதிமுக ஆட்சி காலத்தில் கொண்டு வந்த திட்டங்கள் தான் செயல்பட்டுள்ளதாகவும், மேலும் வருவாய் இல்லாத பட்ஜெட் ஆகவும் மாநகராட்சி வருவாய் அனைத்தும் புதிய பேருந்து நிலைய கட்டுமான பணிக்கு செயல்படுவதாகவும், மேலும் திருச்சி மாநகரில் முக்கிய வழித்தடங்களை இணைக்கும் பாலங்கள் நீண்ட நாள் கிடப்பில் உள்ளதாகவும், மக்கள் கட்டாத வரிகளை மிரட்டி வரிக்கு வட்டி என்ற புதிய கான்செப்ட் மாநகராட்சி செயல்படுத்தி உள்ளது கண்டிக்கத்தக்கது இவ்வாறு அவர்கள் கூறினர்.