இந்தியா முழுவதும் உள்ள நகரங்களின் தூய்மையை பேணி பாதுகாக்கும் வகையில், தூய்மையான நகரங்களை தேர்வு செய்து வருகிறார்கள். அந்த வகையில் தமிழ் நாட்டின் தூய்மையான மாநகர பட்டியலில் திருச்சி நம்பர் 1 இடத்தை பெற்றது. இதுபோன்ற தூய்மையான நகரங்களாக தேர்வு செய்யப்பட்ட நகரங்களுக்கு விருது வழங்கும் விழா டில்லியில் நடந்தது. விழாவுக்கு இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற அமைச்சகத்தின் செயலர் மனோஜ் ஜோஷி கலந்து கொண்டு, தமிழகத்தில் தூய்மை நகரத்தில் முதலிடம் பெற்றதற்கான திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்கு தூய்மை நகரத்துக்கான சான்றிதழ் மற்றும் விருதை வழங்கி பாராட்டினார். இந்த விருதினை மாநகராட்சி ஆணையர் டாக்டர் வைத்திநாதன் பெற்றார். அந்த விருதினை அவர் அமைச்சர் கே. என். நேரு , மேயர் மு. அன்பழகன் ஆகியோரிடம் காட்டி வாழ்த்து பெற்றார். தொடர்ந்து திருச்சியின் தூய்மையை பேணி பாதுகாக்கும்படி கூறிய அமைச்சர் நேரு, விருது பெற்றதற்காக வாழ்த்து தெரிவித்தார்.
தமிழகத்தில் நம்பர் 1 தூய்மை நகரம் திருச்சி …… மாநகராட்சிக்கு அமைச்சர் நேரு வாழ்த்து
- by Authour
