திருச்சி மாநகராட்சியில் இன்று மக்கள் குறை கேட்கும் நாள் கூட்டம் திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது.
திருச்சியில் மழைக்காலம் துவங்கினாலும் எந்தவித பாதிப்பும் இருக்காது.
உயிர் சேதம் ஏற்படாத வகையிலும் தண்ணீர் தேங்காத வகையிலும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. கால்வாய்கள் அடைப்பு காரணமாக ஒரு சில இடங்களில் மழை நீர் தேங்குகிறது. திருச்சி கோட்டை ரயில்வே மேம்பாலம் கட்டுமான பணி இந்த வார இறுதி அல்லது அடுத்த மாதம் துவங்கப்படும். 34 கோடியில் புதிதாக விரிவு படுத்தப்பட்ட பாலம் கட்டப்பட உள்ளது என தெரிவித்தார்.