திருச்சி மாநகராட்சி மண்டலம் எண், 5 வார்டு எண் 27பட்டாபிராமன் பிள்ளை தெரு பதியில் பகுதி சபா கூட்டம் நடைபெற்றதில் மேயர் அன்பழகன் தலைமையில் பொதுமக்களிடம் கோரிக்கைகளை கேட்டு அறிந்து மனுக்களை பெற்று மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மேயர் தெரிவித்தார்.
27 வது வார்டில் சங்கீதபுரம், ஆட்டு மந்தை தெரு,சவேரியார் கோவில் தெரு, மீன் கார தெரு,மல்லிகைபுரம்,ஜெனரல் பஜார்,வண்ணாரப்பேட்டை பெருமாள் கோவில் தெரு ,பட்டாபிராமன் பிள்ளை தெரு ஆகியபகுதிகளில் உள்ள பொதுமக்கள் தங்களது குறைகளை மனுவாக கொடுத்தனர்.
ஸ்ரீரங்கம்ஆண்டவன் கலைக் கல்லூரியில் நடைபெற்ற பகுதி சபா கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் கலந்து கொண்டுடார்.
இதே போல திருச்சி மாநகராட்சி 65 வார்டுகளில் அந்தந்த மண்டல தலைவர்கள் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் தலைமையில் பகுதி சபா கூட்டம் நடைபெற்றது. இதில் அந்தந்த வார்டுக்கு உட்பட்ட பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மாநகராட்சி நிர்வாகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. பொதுமக்களின் கோரிக்கைகளை மனுவாக பெறப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் உதவி ஆணையர் சதீஷ்குமார், உதவி செயற்பொறியாளர் ராஜேஷ் கண்ணா /சுகாதார ஆய்வாளர் வினோத் கண்ணா, இளநிலை பொறியாளர் பிரசாத் மற்றும் ஏராளமான பொதுமக்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.