போகி பண்டிகையை முன்னிட்டு தேவையில்லாத பொருட்கள் துணிகள்,டையர்கள், பழைய புத்தகங்கள், எரித்து சுற்றுச்சூழலை மாசுபடுத்த வேண்டாம் என்றும், நமக்கு தேவையில்லாத பொருட்கள் மற்றவர்களுக்கு பயன்படும் பொருளாக இருக்கலாம் , மறுசுழற்சிக்கு பயன்படக்கூடிய பொருட்களை தூய்மை பணியாளர்கள், விற்று பணப்பயன் பெறுவர்கள் . எனவே தேவையற்ற பொருட்களை எரித்து சுற்றுச்சூழலை மாசுபடுத்தாமல் அவற்றை திருச்சி
மாநகராட்சி வாகனத்திலோ அல்லது வீடு தேடி வரும் தூய்மை பணியாளர்களிடமோ ஒப்படைக்கும்படி வலியுறுத்தினர்.
தண்ணீர் அமைப்பு செயல் தலைவர் கே.சி. நீலமேகம், தண்ணீர் அமைப்பு இணை செயலாளர் ஆர்.கே.ராஜா, 57வது மாமன்ற உறுப்பினர் தி.முத்து செல்லம், தலைமையாசிரியர் ஹ.புஷ்பலதா, ஆசிரியர்கள் செல்வி, ராஜஷுலா, ஜெயராணி, மற்றும் மாணவ, மாணவிகள், நகராட்சி ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துக் கொண்டார்கள்.