தேர்தல் பத்திரங்கள் மூலம் இந்தியா முழுவதும் அனைத்து கட்சியினரும் நன்கொடை பெற்றுள்ளனர்.
இதில் சுமார் 6000க்கு கோடியை பாரதீய ஜனதா கட்சி பெற்றுள்ளது. தேர்தல் பத்திரங்கள் தொடர்பாக வழக்கு நீதிமன்றம் சென்றது. விசாரணையில் நீதிபதிகள் தேர்தல் பத்திரங்களில் யார்? யார்? எவ்வளவு பெற்றவர்கள் விவரங்கள் என்பதை வழங்கக்கோரி நீதிமன்றம் பாரத் ஸ்டேட் வங்கிக்கு உத்தரவிட்டது.
ஆனால் வங்கியோ நாங்கள் தயார் செய்து வழங்க 3மாத கால அவகாசம் தேவை என கூறியுள்ளது.
அனைத்தையும் தற்போது டிஜிட்டல் மூலமாக உள்ள நிலையில் வாங்கி 3மாத அவகாசம் கேட்பது ஏன் என்று கண்டித்து காங்கிரஸ், கம்யூனிஸ்ட், திமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் இந்தியா கூட்டணி உள்ள அனைத்து கட்சிகளும் இந்தியா முழுவதும் கண்டனம் தெரிவித்து வருகிறது.
தமிழக முழுவதும் காங்கிரஸார் வங்கிகளை முன்பு கண்டனம் தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக இன்று காலை திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி முன்பு காங்கிரசார் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பாரத ஸ்டேட் வங்கியை தன்னுடைய கைப்பாயாக பயன்படுத்திக் கொண்டு செயல்படும் பாஜக அரசு கண்டித்து சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கண்டன கோஷங்களை எழுப்பினர்.