திருச்சி மாவட்டம், லால்குடியில் உள்ள எல். அபிஷேகப்புரத்தைச் சேர்ந்தவர் பாரதிமோகன். இவர் காங்., கட்சியின் வடக்கு மாவட்ட நிர்வாகியாக பதவி வகித்து வருகிறார். இவரது வீட்டில் இன்று சுத்தம் செய்யும்போது மாடிப்படியின் கீழ் சிவப்பு நிறம் கொண்ட கொடிய விஷமுள்ள ரத்த மண்டலம் என்ற அரியவகை பாம்பு இருந்தது. இதுகுறித்து லால்குடி தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் விரைந்து வந்த தீயணைப்புப்படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று கொடிய விஷமுள்ள பாம்பை சுமார் அரை மணி நேரம் போராட்டத்திற்கு பின் உயிருடன் பிடித்தனர். இதனைத் தொடர்ந்து தச்சங்குறிச்சி வனப்பகுதியில் அந்த பாம்பை விடுவித்தனர். இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி அருகே காங்., நிர்வாகி வீட்டில் புகுந்த கொடிய விஷபாம்பு…
- by Authour
