திண்டுக்கல் மாவட்டம், பூசாரிப்பட்டி நாயக்கன் வலசு பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 34). இவரது மனைவி திவ்யா ( 24) இந்த தம்பதியருக்கு மூன்று வயதில் தானிஷ் என்ற ஆண் குழந்தை உள்ளது.
திவ்யா தனது குழந்தையுடன் திண்டுக்கல்லில் இருந்து சென்னைக்கு ஒரு பஸ்ஸில் புறப்பட்டார் திருச்சி மத்திய பஸ் நிலையம் வந்தபோது கணவருக்கு தொடர்பு கொண்டு தனது தாயாருக்கு உடல்நிலை சரியில்லை எனக் கூறிவிட்டு குழந்தையுடன் திவ்யா திருச்சி சென்ட்ரல் பஸ் ஸ்டாண்டில் இறங்கினார். அதன் பின்னர் குழந்தையுடன் மாயமாகிவிட்டார். கணவர் பழனிச்சாமி கண்டோன்மெண்ட் போலீசில் புகார் செய்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.