Skip to content
Home » போதை மாத்திரை விற்பனையை தடுக்க… திருச்சி கமிஷனர் ஆலோசனை..

போதை மாத்திரை விற்பனையை தடுக்க… திருச்சி கமிஷனர் ஆலோசனை..

  • by Authour

திருச்சி, கே.கே.நகர் ஆயுதப்படை சமுதாய கூடத்தில் நேற்று மாநகரத்தில் போதை மாத்திரைகளை விற்பனையை தடுக்கும் பொருட்டு திருச்சி மாநகரில் உள்ள அனைத்து கூரியர் சர்வீஸ் நிறுவனங்களின் உரிமையாளர்கள் மற்றும் அலுவலக ஊழியர்களுடன் கலந்தாய்வு கூட்டம் திருச்சி மாநகர காவல் ஆணையர்  காமினி  தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் கூரியர் நிறுவனங்களை சேர்ந்த 70 ஊழியர்கள் கலந்து கொண்டனர் அவர்களுக்கு,

1. போதை மாத்திரைகளின் தீங்குகள் குறித்து விவரிக்கப்பட்டது.

2. மருந்து பொருட்களை ஆன்லைனில் ஆர்டர் செய்தும் மற்றும் வெளி மாநிலங்களில் உள்ள மருந்து மொத்த விற்பனையாளர்களிடம் (Wholesale Dealers) இருந்தும், நிறுவனங்களிடமிருந்து

ஆர்டர் செய்து வரும் பார்சல்களை உரிய ஆவணங்கள் உள்ளனவா? (Proper Invoice) என்பதை உறுதி செய்ய வேண்டும்.

3. அவ்வாறு உறுதி செய்த பிறகே குறிப்பிட்டுள்ள விலாசத்தில் உள்ள வீடு அல்லது அலுவலங்களுக்கு நேரில் சென்றுதான் விநியோகம் செய்ய வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டது.

4. போதை மாத்திரைகளை விநியோகம் செய்ய துணை போகும் ஊழியர்கள் மீது சட்ட பூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கப்பட்டது.

5. பார்சலை பெறும் நபரின் விலாசம் சரிவர இல்லாமல், செல்போன் எண் மட்டும் இருந்தால் அதனை விநியோகம் செய்யாமல் காவல்துறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டது.

6. மேலும் சமுதாய நலன் கருதியும் இளைஞர்களின் எதிர்காலம் கருதியும் இவ்வாறான குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் குறித்த தகவல்களை தெரியப்படுத்த வேண்டும் எனவும் அவ்வாறு தகவல் தெரிவிப்பவர்களின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் காவல் துணை ஆணையர்கள் மற்றும் அனைத்து சரக காவல் உதவி ஆணையர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *