Skip to content

காவலர் பயிற்சி பள்ளியில் பயிற்சி நிறைவு விழா… திருச்சி கமிஷனர் பங்கேற்பு….

திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு அண்ணா நகரில் காவலர் பயிற்சி பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் பெண் காவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த ஜூன் மாதம் 1ம் தேதி முதல் 370 புதிதாக தேர்வு செய்யப்பட்ட பெண் காவலர்களுக்கு சட்ட பயிற்சி. கவாத்து பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் கடந்த 7மாதமாக வழங்கப்பட்டது.

அதன் பயிற்சி நிறைவு விழா நேற்று பயிற்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. அதற்கு பயிற்சி பள்ளி துணை முதல்வர் மணவாளன் தலைமை வைத்தார். முதன்மை சட்ட போதகர் சுகுணா முதன்மை கவாத்து போதகர் பிரான்சிஸ் மேரி ஆகியோர் முன்னிலை வைத்தார்.

திருச்சி போலீஸ் கமிஷனர் காமினி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது… பயிற்சி முடித்த காவலர்கள் நல்ல முறையில் பயிற்சியை மேற்கொண்டுள்ளது பாராட்டத்துக்கு உரியது. இந்த பயிற்சியை

நிறைவு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டதற்கு பெண் காவல் அதிகாரியாக பெருமை கொள்வதாகவும் இந்த சமுதாயத்தில் பெண்கள் ஆற்றிடும் பணிகள் மிகவும் சிறப்பானது.

ஆண்களுக்கு நிகராக பெண்கள் பல துறையிலும் சாதனை புரிந்துள்ளார்கள் புரிந்துகொண்டு உள்ளார்கள் இனிமேலும் புரிவார்கள் தாயாக, மகளாக , மனைவியாக சமூகத்தின் ஒற்றுமைக்கு அவர்கள் அளிக்கும் பங்குபெரியது. பெண்கள் காவல்துறையில் இணைந்து 50ஆண்டுகள் நிறைவடைந்து உள்ளது.

முத்தமிழ் அறிஞர் கலைஞர் முதல்வராக இருந்த பொழுது 1973ம் ஆண்டு தமிழக காவல்துறையில் பெண்கள் இருக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் அடிப்படையில் பெண்களை காவல்துறைக்கு பணி நியமனம் செய்திட உத்தரவிட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் பெண் காவலர்கள் பொன்விழா நடத்தி பெண் காவலர்களுக்கு அவர்கள் நலன் சார்ந்த பல்வேறு சலுகைகளை தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.

காவல் நிலையங்களில் தினந்தோறும் நடைபெறும் ஆஜர் அணி வகுப்பில் பெண் காவலர்கள் 7 மணிக்கு பதிலாக 8 மணிக்கு கலந்து கொள்ளவும் தமிழகத்தில் உள்ள பெரு நகரங்களில் பெண் காவலர்கள் தங்குவதற்கு என தனி தங்கும் விடுதிகள் ஏற்படுத்தவும், காவல் நிலையங்களில் தனி கழிவறை மற்றும் ஓய்வு அறை அமைக்கவும், குழந்தைகளை பராமறிக்க காப்பகம் உருவாக்கும் சிறப்பாக பணிபுரியும் பெண் காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு ஆண்டுதோறும் கலைஞர் காவல் பணி விருது வழங்கவும் குடும்ப சூழ்நிலை காரணமாக விடுப்பு மற்றும் பணி மாறுதல் வழங்க இச்சலுகைகள் அனைத்தும் நாம் அனைவரும் திரும்ப சமுதாயத்திற்கு அளித்திட வேண்டும் சமுதாயத்திற்காக மக்களின் பாதுகாப்புக்காக நம்மையே அர்ப்பணித்துக் கொண்டதற்காக அரசு நமக்கு அறிவித்து உள்ள சலுகைகள் இவை அனைத்து நீங்கள் நேர்மையாகவும் நல்ல ஒழுக்கத்துடனும் பணிபுரிந்து பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

அதே நேரத்தில் பணியில அர்ப்பணிப்புடன் நேர்மையுடன் இருந்தால் உங்களுக்கு அனைத்து அனைத்து விருதுகளும், அனைத்து ஊதியங்களும், சிறப்பு ஊதியங்களும் சரியாக வந்துசேரும் . பயிற்சியின் போது எப்படி கட்டு கோப்புடன் இருந்தீர்களோ அதுபோல் இறுதிவரை இருந்தீர்கள் என்றால் காவல்துறையில் அர்ப்பணிப்புடன், சேவையுடன், ஒழுக்கத்துடன், நேர்மையுடன் இருந்தால் அரசு அளிக்கக் கூடிய பதவி உயர்வு மற்றும் சலுகைகள் அனுபவித்து இந்த நாட்டிற்கு இந்த காவல்துறைக்கும் அர்ப்பணிப்புடன் பணியாற்ற முடியும்.

பல்வேறு பெருமைகளையும் சாதனைகளையும் தன்னகத்தே கொண்ட தமிழக காவல்துறையில் பணிபுரிய காத்திருக்கும் காவலர்களே நீங்கள் நேர்மையையும் ஒழுக்கத்தையும் இரு கண்களாக கொண்டு எந்த ஒரு சூழ்நிலையிலும் தன்னம்பிக்கையை விட்டு விடாமலும் இழந்து விடாமலும் தைரியமாக எந்த சூழ்நிலையும் அணுக வேண்டும் அதே நேரத்தில் பொதுமக்களிடம் பணிவுடன் அன்புடனும் பழக வேண்டும். எந்த ஒரு தீய சக்திகளுடன் பழக கூடாது. ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு சம்பளத்தை இழந்து விடக்கூடாது. ஆரம்ப காலத்திலேயே உங்களது சம்பளத்திற்கு ஏற்றவாறு வாழ கற்றுக் கொள்ள வேண்டும். உங்களை நல்ல காவலர்களாக பயிற்றுவித்து சட்ட நுண்ணறிவுடன் பயிற்றுவித்த காவலர்கள் முதல் அமைச்சர் அதிகாரிகள் வரை அனைத்து அமைச்சு பணியாளர்களுக்கும் நன்றி என்றார். இந்த பயிற்சி முடித்த பெண் காவலர்கள் ஆயுதப்படைக்கு செல்வார்கள் அதன் பிறகு காவல் நிலையங்களில் பணிக்கு அமர்த்தப்படுவார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!