திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தில் பணியாற்றக்கூடிய வடமாநிலத்தைச் சேர்ந்த 250 தொழிலாளர்களை , மாநகர காவல் துறை ஆணையர் சத்திய பிரியா நேரில் சந்தித்து அவர்களின் பிரச்சனைகளை கேட்டு அறிந்தார்.. பின்பு தொழிலாளருக்கு ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால் உடனடியாக உதவி எண்ணிற்கு
தொடர்பு கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதனைத் தொடர்ந்து தொழிலாளருக்கு துண்டு பிரசாரங்கள் கொடுத்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
பின்பு செய்தியாளர்களை சந்தித்த திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் சத்திய பிரியா பேசியது.. திருச்சி மாநகரத்தில் 3500 வட மாநிலங்களை சேர்ந்தவர் உள்ளனர். இவர்களுக்கு வாரம் ஒருமுறை விழிப்புணர்வு வழங்கபட்டு வருகிறது. இதுவரை எந்த விதமான பிரச்சனைகள் திருச்சியில் இல்லை.. தவறான வதந்திகளை பரப்பினால் அவர்கள் மீது சட்ட ரீதியான கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.. புகார்கள் வரும் பட்சத்தில் உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.