தமிழகம் முழுவதும் விபத்தை கட்டுப்படுத்தும் வகையில், இருசக்கர வாகனத்தில் மற்றும் விதிமுறைகள் மீறுதல்களை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு விழிப்புணர்வுகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். இதே போல் பல்வேறு சமூக நல அமைப்புகளும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக இன்று திருச்சி ஜமால் முகமது கல்லூரியின் நாட்டு நலபணி திட்ட மாணவர்கள் சார்பில் கல்லூரி முதல்வர் இஸ்மாயில்முகைதீன் தலைமையில் வாகன விபத்து
குறித்த விழிப்புணர்வு நிகழ்வை திருச்சி மாநகர கமிஷனர் சத்தியபிரியா துவக்கி வைத்தார்.
அப்போது மாணவர்கள் விபத்து ஏற்படுத்துவதை தடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளை நாடகமாக நடத்தி காட்டினர். இவர்களைக் கண்ட காவல்துறை ஆணையர் மாணவர்களை பாராட்டி பொங்கல் வாழ்த்து தெரிவித்தார்.