திருச்சி, காந்தி மார்கடெ் போலீஸ் ஸ்டேசனில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றியவர் குமார். இவர் தலைமையில் லாட்டரி மற்றும் கஞ்சா விற்பனையை தடுக்க தனிப்படை செயல்பட்டு வந்தது. இவருடன் தனிப்படையில் பணியாற்றிய தலைமை காவலர்கள் சங்கராந்தி, ராஜேஸ்குமார் உட்பட 5 பேர் திடீரென மாநகர ஆயுதபடைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இவர்கள் லாட்டரி விற்பனையை தடுக்க தவறியதால் நடவடிக்கை மேற்கொண்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில் அவர்களை கமிஷனர் காமினி பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.