திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் அடுத்துள்ள பச்சைமலை சோழமாத்தி பகுதியில் வசிப்பவர் செந்தில் இவரது ஒரே மகள் ஜனனி (18). செந்தில் நரசிங்கபுரம் அருகே உள்ள கானாபாடி கிராமத்தில் தங்கி விவசாயக் கூலி வேலை செய்து வருகிறார்.
இந்த நிலையில் இவரது மகள் ஜனனி நாமக்கல் அறிஞர் அண்ணா கல்லூரியில் பிஎஸ்சி முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் கல்லூரி வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கி படித்து வந்த நிலையில் ஜனனி விடுதியில் இருந்து சொந்த ஊருக்கு வந்துள்ளார். வீட்டில் யாரும் இல்லாத நிலையில் வீட்டைத் திறந்து வீட்டின் ஹாலில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். அவரது தாத்தா செங்கமலை அப்பகுதியாக வந்தவர் வீட்டின் வாசல் கதவு திறந்து இருப்பதை பார்த்து உள்ளே சென்று பார்த்த போது ஜனனி தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார். செங்கமலை அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் ஓடி வந்து உடலை கீழே இறக்கி மருத்துவமனைக்கி கொண்டு சென்றனர் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தார். இதை தொடர்ந்து உப்பிலியபுரம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து ஜனனியின் உடலை கைப்பற்றி துறையூர் அரசு மருத்துவமனைக்கு உடல் கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர். கல்லூரி மாணவி இறந்தது காரணத்தை காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.