திருச்சி மாவட்டம் சமயபுரம் சுங்கச்சாவடி அருகே அமைந்துள்ள தனியார் (ராமகிருஷ்ணா) பொறியியல் கல்லூரியில் 800க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் மருதக்குடி அருகே செல்லப்பன்பேட்டை, மேலத்தெருவை சேர்ந்தவர் கோகுல்நாத், திருச்சி மாவட்டம் சமயபுரம் சுங்கச்சாவடி அருகே உள்ள ராமகிருஷ்ணா கல்லூரியில் பொறியியல் படிப்பு முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
வழக்கம்போல் கோபிநாத் கடந்த 3ஆம் தேதி கல்லூரிக்கு சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. மாணவனை பெற்றோர், உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததாலும், தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்ட போதும் தொடர்பு கொள்ளும் நிலையில் இல்லை. இதனால் வேதனை அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் சமயபுரம் காவல் நிலையத்தில் கல்லூரிக்குச் சென்ற கோபிநாத் காணவில்லை என புகாரின் அளித்ததீன் பேரில் சமயபுரம் போலீசார் கல்லூரி சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை செய்த போது….
கடந்த 3ஆம் தேதி காணாமல் போன கோபிநாத் அன்று காலை வழக்கம் போல் கல்லூரிக்கு தேர்வு எழுத வந்துள்ளார். தேர்வில் காப்பி அடித்ததால் கல்லூரி பேராசிரியர் தொலைபேசியில் பெற்றோரிடம் தொடர்பு கொண்டு கோபிநாத் தேர்வில் காப்பி அடித்தது குறித்து தெரிவித்துள்ளனர் இதனால் பெற்றோரும், பேராசிரியரும் கண்டித்துள்ளனர்.
இதில் கோபம் அடைந்த கோபிநாத் தேர்வு எழுதி முடிந்த பின்பு வழக்கம்போல் வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு எங்கு சென்றார் என்று தெரியவில்லை.
சமயபுரம் போலீசாரின் விசாரணையில் 15 நிமிடத்திற்கு ஒருமுறை கோபிநாத்தின் செல் போன் வாட்ஸ் அப் ஆன்லைனில் வந்து செல்வதாக தெரிவித்தனர். மேலும் போன் செய்தால் தொடர்பை துண்டித்து வருகிறார் இது குறித்து போலீசார் விசாரணை செய்து வருவதாக தெரிவித்தனர்.
தேர்வில் காப்பியடித்த கல்லூரி மாணவரை பெற்றோர் மற்றும் ஆசிரியர் திட்டியதால் கோபம் அடைந்து தலைமறைவான சம்பவம் கல்வியாளர்களிடையே பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது…