Skip to content
Home » கல்லூரி மாணவர்கள் விடுதிக்குள் புகுந்து கத்தி முனையில் பணம் பறித்த நபர் குண்டாசில் கைது…

கல்லூரி மாணவர்கள் விடுதிக்குள் புகுந்து கத்தி முனையில் பணம் பறித்த நபர் குண்டாசில் கைது…

திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்திய பிரியா திருச்சி மாநகரத்தில் காவல் ஆணையாளராக பொறுப்பேற்றது முதல் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், குற்றச்சம்பவங்கள் ஏதும் நடைபெறாவண்ணம் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளவும், கத்தியை காண்பித்து பணம், செல்போன்களை கொள்ளையடிக்கும் நபர்களை கண்டறிந்து கைது செய்ய திருச்சி மாநகர காவல் துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கியுள்ளார்கள்.

கடந்த 15.06.2023-ம்தேதி, பாலக்கரை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பீமநகர் மேட்டுத்தெருவில் கட்டிட வேலை செய்யும் தொழிலாளி ஒருவர் நடந்து சென்றபோது கத்தியை காண்பித்து மிரட்டி சட்டைபையில் வைத்திருந்த பணம் ரூ.800/- கொள்ளையடித்து சென்றதாக பீமநகர் மேட்டுத்தெருவை சேர்ந்த கிருபாகரன் என்பவரை கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் கிருபாகரன் மீது தில்லைநகர் காவல்யநிலைய பகுதியில் பூட்டிய கடையில் திருடியதாக ஒரு வழக்கு, கே.கே.நகர் காவல்நிலைய பகுதியில் தனியார் விடுதியில் உள்ள புகுந்து கல்லூரி மாணவரிடம் கத்தியை காட்டி மிரட்டி ஸ்மார்ட் வாட்ச், லேப்டாப் மற்றும் பணத்தை கொள்ளையடித்ததாக ஒரு வழக்கு, பாலக்கரை காவல்நிலையத்தில் அடிதடி, திருட்டு, பணம்பறிப்பு உள்ளிட்ட குற்றசெயல்களில் ஈடுபட்டதாக 9 வழக்குகள், திருச்சி மாவட்டம் நவல்பட்டு காவல்நிலைய எல்லலையில் பூட்டிய வீடு மற்றும் செல்போன் கடையில் திருடியதாக 2 வழக்குகள், இருசக்கர வாகனம் திருடியதாக 2 வழக்குகள் உட்பட 5 வழக்குகள் என திருச்சி மாநகரம் மற்றும் திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 17 வழக்குகள் நிலுவையில் இருப்பது விசாரணையில் தெரியவந்தது.

எனவே, கிருபாகரன் என்பவர் தொடர்ந்து திருட்டு, கொள்ளை சம்பவங்களில் ஈடுபவதும், மேலும் பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர் எனவும் விசாரணையில் தெரியவந்ததால், மேற்படி கிருபாகரன் தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு பாலக்கரை காவல் நிலைய காவல் ஆய்வாளர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்து, திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்திய பிரியா மேற்படி எதிரியை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆணையிட்டார். அதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் உள்ள எதிரி மீது குண்டர் தடுப்பு சட்ட ஆணையினை சார்பு செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.

திருச்சி மாநகரில் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்யபிரியா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *