திருச்சி மிளகு பாறை பகுதியில் உள்ள கிஆபே விஸ்வநாதன் அரசு மருத்துவக்கல்லூரியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் மாணவர்களுக்காக அங்கு இருந்த கூடைப்பந்து விளையாட்டு மைதானம் புனரமைக்கப்பட்டு தற்போது பித்யேகயமான கூடை பந்து விளையாட்டு மைதானமாக 7.64 லட்சம் மதிப்பீட்டில் சீரமைக்கபட்டுள்ளது. அதற்கான துவக்க விழா இன்று மருத்துவகல்லூரி வளாகத்தில்
நடைபெற்றது. இதில் திருச்சி மாநகர காவல்துறை துணை ஆணையர் சுரேஷ்குமார், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிய மைதானத்தை திறந்து வைத்தார். இந்நிகழ்வில் கல்லூரி துணை முதல்வர் அர்ஷியா பேகம், காவல் உதவி ஆணையர் கென்னடி, மகாத்மா காந்தி அரசு மருத்துவமனை முதல்வர் நேரு, மருத்துவ கண்காணிப்பாளர் அருண் ராஜ், கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.