திருச்சிராப்பள்ளி மாவட்டம், முசிறியில் உழவர் சந்தையின் செயல்பாடுகளை மாவட்ட கலெக்டர் மா.பிரதீப் குமார் இன்று (08.12.2022) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, விற்பனை செய்யும் விளைப்பொருட்களின் விலை நிர்ணயம் சரியான முறையில் மேற்கொள்வது குறித்து அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கியும்,
விளைப்பொருட்களை விற்பனை செய்யும் விவசாயிகளிடம், பொதுமக்களிடம் கலந்துரையாடினார். இந்நிகழ்வில், முசிறி வருவாய் கோட்டாட்சியர் த.மாதவன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) மல்லிகா, வேளாண்மை அலுவலர் நந்தகுமார் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.