13-ஆவது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு கல்லூரி, மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்ட வாக்காளர் விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட தேர்தல் அலுவலரும், திருச்சி மாவட்ட கலெக்டர் மா.பிரதீப் குமார் நேற்று திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்து கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) இரா.வைத்தியநாதன், தேர்தல் தனி வட்டாட்சியர் கே.முத்துசாமி ஆகியோர் உடனிருந்தார். இப்பேரணியில் வாக்களிப்பது குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கல்லூரி மாணவர்கள் ஏந்தியபடி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து நீதிமன்றம் வரச் சென்றனர்.
திருச்சியில் 13-வது தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி…
- by Authour
