திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில்மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்று வருகிறது.
இதில் பட்டா மாறுதல் மின் இணைப்பு உள்ளிட்ட பல்வேறு புகார்களை மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக மனு மூலம் அளித்து வருகின்றனர். இந்திய மாணவர் சங்கம் சார்பாக திருச்சி மாவட்ட கலெக்டரிடம் ரயில் போல் வரிசையாக வந்து மாணவர்கள் மனு அளித்தனர் அம்மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது:-
திருச்சி மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் அருகாமையில் உள்ள மாவட்டமான தஞ்சை மாவட்டத்தில் இருந்து தினமும் கல்வி நிலையங்களுக்கு வந்து செல்கின்றனர். மதிய நேரத்தில் இயக்கப்படும் ரயில் சேவைகள் மிகவும் குறைவாக உள்ளதால் மாணவர்கள் மிகவும் சிரமப்பட்டு நீண்ட நேரம் காத்திருந்து தங்கள் ஊருக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு திருச்சி மாவட்டத்திலிருந்து தஞ்சை மாவட்டத்திற்கு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்மனுவில் தெரிவித்திருந்தனர். மாணவர்களின் இந்த ரயில் விடும் போராட்டத்தால் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.