திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தலைமையில் இன்று விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு விவசாய சங்கதலைவர்கள் விவசாயிகள் உட்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை முன் வைத்தனர்.
இதைத் தொடர்ந்து தமிழக விவசாயிகள் சங்கம் கட்சி சார்பற்றது.மாவட்டத் தலைவர் ம.ப சின்னத்துரை.
சமீபத்தில் இலால்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில்.
புள்ளம்பாடி ஒன்றியம் குமுளூர்.ஊராட்சி பகுதி எல்லைக்கு உட்பட்ட லிங்கத்தடியான் திருக்கோவிலும்,அதன் சிலைகளும், அதன் திருக்குளமும், அரசுக்கு சொந்தமான மழை நீர் சேமிப்பு குளங்கள், நீர் வழித்தடங்கள், மக்கள் பயன்பாட்டின் அரசு வண்டிப் பாதை, அரசுக்கு சொந்தமான தரிசு நிலங்கள், அங்கிருந்த 400க்கும் மேற்பட்ட பனை
மரங்கள், அறிய வகை நாட்டு மரங்களும், சுருதி கார்டன் ரியல் எஸ்டேட்,வரூஸ் பிரைவேட்லிமிடெட் பிளாண்டேஷன் நிறுவனத்தார்களால் கொள்ளையடிக்கப்பட்டதை கண்டித்து, உண்ணா நிலை போராட்டம் நடைபெற்றது, அப்போது ம.ப. சின்னத்துரை சட்டையை கிழித்து தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இச்செயலை கண்டித்தும் தாக்கிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்காததால் இன்று நடைபெற்ற மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கிழிந்த சட்டையுடன் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் அவருக்கு உறுதுணையாக மற்ற விவசாயிகளும் உள்ளிருப்பு போராட்டத்தில் கலந்து கொண்டனர்,மேலும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் மாவட்ட ஆட்சியர் பேச்சுவார்த்தை நடத்தி சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினர், அதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டு கலைந்து சென்றனர்.