Skip to content
Home » திருச்சி கலெக்டர் ஆபீஸ், மாநகராட்சி….. தரைக்கடை வியாபாரிகள் முற்றுகை

திருச்சி கலெக்டர் ஆபீஸ், மாநகராட்சி….. தரைக்கடை வியாபாரிகள் முற்றுகை

  • by Senthil

திருச்சி, கலெக்டர் அலுவலகத்தில் இன்று குறைத்திருக்கும் நாள் கூட்டம் நடைபெற்றது கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் தலைமை தாங்கினார். ஏராளமான அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுக்களாக எழுதி மாவட்ட கலெக்டர் பிரதீப் குமாரிடம் வழங்கினார்கள். இந்நிலையில் அனைத்து தரைக்கடைகள் வியாபாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் இன்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கலெக்டர் பிரதீப் குமாரிடம் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
சாலையோர வியாபாரிகளின் வியாபார குழு தேர்தல் வருகிற 22ந்தேதி நடத்தப்பட உள்ளது.இந்த நிலையில்
தேர்லுக்கு முன்பாக எடுத்த கணக்கெடுப்பில் பல்வேறு குளறுபடிகள் உள்ளது. குறிப்பாக திருச்சி மாநகராட்சியில் உள்ள தரைக்கடை வியாபாரிகள் மட்டுமல்லாமல் பல்வேறு தொழில் செய்பவர்கள் தரைக்கடை வியாபாரிகளாக இணைக்கப்பட்டுள்ளனர். மேலும் லால்குடி, மண்ணச்சநல்லூர் நகராட்சிகளை சேர்ந்த தரைக்கடை வியாபாரிகளையும் இணைத்துள்ளனர். கணக்கெடுப்பில் உள்ள தரைக்கடை வியாபாரிகளுக்கு முறையாக அடையாள அட்டை வழங்கப்படவில்லை. அதிகபட்சமாக 2000 பேர் மட்டுமே தரைக்கடை வியாபாரிகளாக இருக்கும் நிலையில் பட்டியலில் 6 ஆயிரம் பேர் இணைக்கப்பட்டுள்ளனர்.

இந்த கணக்கெடுப்பில் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளது. எனவே தற்பொழுது வியாபார குழு தேர்தலை நடத்தக் கூடாது அதனை நிறுத்திவிட்டு முறையாக கணக்கெடுப்பு எடுத்து பட்டியலில் சரியான தரைக்கடை வியாபாரிகளை சேர்த்த பின்னர் தான் தேர்தலை நடத்த வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர்.

இந்த மனு கொடுக்கும்போது கலெக்டர் அலுவலகத்தில் தரைக்கடை வியாபாரிகள் சங்கத்தை சேர்ந்த ஏராளமானோர் திரண்டு வந்து இருந்தனர். இதுபோல  மாநகராட்சி அலுவலகத்தை தரைக்கடை வியாபாரிகள் முற்றுகையிட்டு . மாநகராட்சி கமிஷனரை சந்தித்து இதே கோரிக்கையை வலியுறுத்தி மனு அளித்தனர்.திருச்சி கலெக்டர் அலுவலகம் மற்றும் மாநகராட்சி அலுவலகத்தில் தரைக்கடை வியாபாரிகள் முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.மேலும் திருச்சி என் எஸ் பி ரோடு நந்தி கோயில் தெரு பெரிய கடை வீதி சின்ன கடைவீதி பகுதியில் உள்ள தரைக்கடை வியாபாரிகள் கடைஅடைப்பு செய்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். இதனால் கடைவீதியில் கரைக்கடைகள் மூடப்பட்டு இருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!