பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது நீர்நிலைகள், ஏரிகள், ஆறுகள், விளைநிலங்களை கார்ப்பரேட்டுகள் அபகரிக்க வழிபாட்டுக்கும் நில ஒருங்கிணைப்பு சட்டம் 2023 உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தியும், நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூபாய் 3500 கரும்பு டன் ஒன்றுக்கு ரூபாய் 5000 வழங்கிட வேண்டும். தமிழ்நாட்டிற்கு என தனி பயிர் காப்பீடு திட்டத்தை தொடங்கிட வேண்டும். ‘
வாழை காய்கறிகள் தோட்டக்கலை பயிர்கள் மற்றும் நிலக்கடலை எண்ணெய் வித்து பயிர்களுக்கும் உரிய
இழப்பீடு வழங்கிட வேண்டும்.
பயிர் காப்பீடு செய்துள்ள விவசாயிகளுக்கு உரிய இணைப்பு தொகை தமிழ்நாடு அரசுக்கு வழங்கும் ஒரு கோரிக்கை களை ஐக்கிய விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் ஒருங்கிணைப்பாளர் பி ஆர் பாண்டியன் முன்னிலையில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதோடு சாலை மறியல் போராட்டமும் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தின் போது விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்தை பூட்டு போடும் போராட்டத்திலும் ஈடுபட்டனர் இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது பின்னர் மாவட்ட ஆட்சியரிடம் மனுவை அளித்து சென்றனர்