திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் தலைமையில் குறைதீர் முகாம் இன்று நடைபெற்றது இந்த முகாமில் காலை 9.30 மணி அளவில் பொதுமக்கள் நீண்ட வரிசையாக நின்று மனு அளிக்க காத்துக் கொண்டிருந்தனர். அப்பொழுது 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் திடீரென மயங்கி விழுந்தார் உடனடியாக அங்கிருந்த மாவட்ட ஆட்சியர் அலுவலக ஊழியர்கள் மற்றும் தாசில்தார் இணைந்து அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர் இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அதன்பின் பொதுமக்களிடம் மனுக்கள் பெறப்பட்டது.
