திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊட்டச்சத்து திருவிழா நிகழ்வில் 100 வளரிளம் பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தை மாவட்ட வருவாய் அலுவலர் இரா.அபிராமி வழங்கினார்.
ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் சார்பாக போஷான் அபியான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதம் ஊட்டச்சத்து மாதமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து இந்த ஆண்டு திருச்சி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் திட்டத்தின் கீழ் இயங்கும் 16 வட்டாரங்களில் பணிகள் திட்டத்தின் உள்ள அரசு பள்ளிகளில் பயிலும் மாணவிகளுக்கு சுகாதாரப் பணிகள் வாயிலாக இரத்த பரிசோதனை செய்ததில் கடுமையான இரத்தசோகை குறைபாடுடைய 100 வளரிளம் பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மாவட்ட வருவாய் அலுவலர் அபிராமி அவர்கள் 100 வளரிளம் பெண்களுக்கு இரத்த சோகையில் இருந்து விடுபட பேரிச்சைபழம், தேன் நெல்லி, கருப்பு உலர் திராட்ச்சை, செவ்வாழை,
கொய்யாப்பழம் மற்றும் இரத்த சோகை குறித்த துண்டு பிரசங்கம் அடங்கிய ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கி, வளரிளம் பெண்களுக்கு ஏற்படும் இரத்த சோகை குறித்தும், அதிலிருந்து விடுபட பின்பற்றப்படும் ஊட்டச்சத்து முறை குறித்தும் அனைவருக்கும் ஆலோசனை வழங்கினார்.
இந்நிகழ்வுகளில், மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் நித்யா(பொ), இணை இயக்குநர் (ஊரக நலப்பணிகள்) லட்சுமி, துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் சுப்ரமணியன், வட்டார குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள், பள்ளி மாணவிகள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.