தமிழக அரசு விவசாயிகள் உற்பத்தி செலவினங்களை நெல்லுக்கு குவிண்டால் 3000 கரும்புக்கு 4000 நிர்ணயம் செய்ய வலியுறுத்தி தமிழ் மாநில காங்கிரஸ் கமிட்டி நிறுவனத் தலைவர் ஜி கே வாசன் உத்தரவின் பெயரில் திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ் மாநில காங்கிரஸ் விவசாய அணி தலைவர் செல்வம் தலைமையில் கையில்
நெல் கரும்பு ஏந்தி திருச்சி கலெக்டர் அலுவலகம் வாயிலில் கொட்டி நூதன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டம் விவசாய அணி தலைவர் செல்வம் தலைமையில் நடைபெற்றது.