திருச்சி மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார் இன்று மணப்பாறை வட்டம், வையம்பட்டி ஊராட்சி ஒன்றிய அரசினர் நடுநிலைப்
பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தினை முதலமைச்சரின் சிறப்புத் திட்டமான “உங்களைத் தேடி உங்கள் ஊரில் ”
திட்டத்தின் கீழ் மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார். பின்னர் அவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம், தூய்மை ஆகியவற்றை ஆய்வு செய்தார்.