தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சார்ந்த இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சி திட்டங்களை வழங்கி வருகிறது. இதன் தொடர்ச்சியாக தற்போது சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், திருச்சி, மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மற்றும் தென்காசி போன்ற பயிற்சி நிலையங்களில் Chiron Skill Program Development Ptd, நிறுவனத்தின் மூலமாக பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
10-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு வார்டுபாய் ஆண் மற்றும் பெண் உதவியாளர்ராகவும், 12-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு வாடிக்கையாளர் பராமரிப்பு நிர்வாகி அழைப்பு மையத்தில் (6 முதல் 12 மாதம் வரை) வேலை முன் அனுபவம் வாய்ந்தவர்கள் மற்றும் நிராயுதபாணி காவலர் போன்ற பயிற்சி அளிக்கப்பட்டு வேலை வாய்ப்பும் வழங்கப்பட உள்ளது.
இப்பயிற்சி பெறுவதற்கு தாட்கோ இணையதளம் www.tahdco.com என்ற முகவரியில் பதிவு செய்யவும். பயிற்சிக்கான மொத்த செலவும் (விடுதி செலவு உட்பட தாட்கோவால் மேற்கொள்ளப்படும். மேலும், விபரங்களுக்கு மாவட்ட மேலாளர் அலுவலகம், தாட்கோ, ராஜாகாலனி, மாவட்ட ஆட்சியர் அலுவலகச்சாலை, திருச்சிராப்பள்ளி-620001 (0431-2463969) என்ற முகவரியில் தொடர்பு கொண்டு இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளுமாறு மாவட்ட கலெக்டர் மா.பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.